bestweb

'ஸ்லிப் டிஸ்க் சயாடிகா' எனும் கால் வலி பாதிப்பிற்கு சத்திர சிகிச்சை அவசியமா?

Published By: Digital Desk 2

23 Jun, 2025 | 01:06 PM
image

பொதுவாக எம்மில் பலருக்கும் கால் வலி பாதிப்பு ஏற்படுவதுண்டு. இதற்காக வைத்தியர்களிடம் சிகிச்சை பெறும் போது அவர்கள் பரிசோதனை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை விவரிப்பார்கள்.

எம்மில் சிலருக்கு ஸ்லிப் டிஸ்க் சயாடிகா எனப்படும் வலி பாதிப்பு ஏற்படுவதுண்டு. இதற்காக சத்திர சிகிச்சை மேற்கொண்டு மேற்கொண்டால் முழுமையான நிவாரணம் கிடைக்குமா? என்ற சந்தேகம் இருக்கிறது. இது தொடர்பாக வைத்தியர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.

எம்முடைய முதுகு தண்டுவட பகுதியின் மையத்தில் அமைந்திருப்பது தான் டிஸ்க். இதனை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் விவரிக்க வேண்டும் என்றால் ஒரு பஞ்சு மெத்தையாலான தலையணை போல் இருக்கும். இதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு, இதனுள் இருக்கும் பிரத்யேக திரவம் கசிந்தால்  அருகில் இருக்கும் நரம்புகளின் மீது அழுத்தத்தை உண்டாக்கும். இதன் காரணமாக வலி ஏற்படும்.

கீழ் பக்க முதுகு வலி, கால் வலி, கால் மரத்துப்போதல், கால் பலவீனம்,  சோர்வு , சிறிது தூரம் கூட நடக்க இயலாத நிலை போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை சென்று சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.

அவர்கள் இத்தகைய தருணத்தில் எம் ஆர் ஐ ஸ்கேன் , சிடி ஸ்கேன்,  அல்ட்ரா சவுண்ட் ,எக்ஸ்ரே ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள்.

இதனை தொடர்ந்து நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும் பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி, முதன்மையான நிவாரணத்தை அளிப்பார்கள். இதனுடன் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் இயன்முறை சிகிச்சையையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் போது பாதிப்புகள் 95 சதவீதம் முதல் 99 சதவீதத்தினருக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கும். மிக சிலருக்கே அதாவது ஒரு சதவீதத்தினருக்கும் குறைவாகவே இத்தகைய பாதிப்பிற்கு சத்திர சிகிச்சை அவசியமாகிறது.

வைத்தியர் விஜயராகவன்

தொகுப்பு அனுஷா.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சத்திர...

2025-07-09 17:51:11
news-image

ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள் என்ன?

2025-07-07 16:51:22
news-image

கட்டுப்படாத குருதி அழுத்தப் பாதிப்பிற்கான நவீன...

2025-07-05 17:18:51
news-image

ஆட்டிச பாதிப்பை ஏற்படுத்தும் ஃப்ரஜைல் எக்ஸ்...

2025-07-04 20:54:50
news-image

கிளியோமா எனும் மூளை நரம்பு புற்றுநோய்...

2025-07-03 16:23:57
news-image

முதுகு தண்டுவட வலி பாதிப்பை சீரமைக்கும்...

2025-07-02 17:44:27
news-image

பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் பாதிப்பும் நவீன சிகிச்சையும்

2025-07-01 17:29:07
news-image

சிறுநீரக நீர்க்கட்டி பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-06-30 18:38:05
news-image

ஆரம்ப நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை...

2025-06-27 18:08:50
news-image

செர்விகல் மைலோபதி எனும் முதுகெலும்பில் ஏற்படும்...

2025-06-26 17:34:32
news-image

புராஸ்டேட் புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-06-25 17:16:50
news-image

'ஸ்லிப் டிஸ்க் சயாடிகா' எனும் கால்...

2025-06-23 13:06:56