bestweb

ஈரானின் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் இஸ்ரேலில் இலங்கையர்கள் ஒருவரும் காயமடையவில்லை - இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகம்

Published By: Digital Desk 3

22 Jun, 2025 | 02:52 PM
image

ஈரானால் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் ஒருவரும் காயமடையவில்லை என இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அதிகரித்து வரும் போர் பதட்டங்களுக்கு மத்தியில், இலங்கை தூதரகம் நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஈரானில் அணுசக்தி தொடர்பான தளங்கள் மீது அமெரிக்க விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக, இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை 8.00 மணியளவில் இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய நகர்ப்புறங்களை குறிவைத்து தொடர்ச்சியான ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இது நிகழ்கிறது. நாள் முழுவதும் நிலைமை அதிகரிக்கக்கூடும் என இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

அதன்படி, இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரா, இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களையும் விழிப்புடன் இருக்குமாறும், தாக்குதல்களின் போது சேதங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு உத்தியோகபூர்வ பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுமாறு வலியுத்தியுள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையிலான மோதல் 10 நாட்களை எட்டியுள்ள நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களாக ஆளில்ல விமான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

எனினும், பலத்த காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று தூதுவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-07-09 06:10:45
news-image

தவறு செய்தவர்கள் தேசிய மக்கள் சக்தி...

2025-07-09 02:16:46
news-image

போராட்டத்தில் ஈடுபட்ட இரு விவசாயிகளை கைது...

2025-07-09 02:06:28
news-image

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக...

2025-07-09 01:53:47
news-image

பேராசிரியர் ராஜ்சோமதேவாவினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியானது 2வது...

2025-07-09 01:50:22
news-image

யாழில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து...

2025-07-09 01:43:34
news-image

ராகம துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...

2025-07-09 02:19:37
news-image

நாட்டை சௌபாக்கியம் மிக்கதாக மாற்ற அர்ப்பணிப்புடன்...

2025-07-08 22:20:24
news-image

துறைமுக அபிவிருத்தி அமைச்சர், பிரதி அமைச்சரை...

2025-07-08 22:22:17
news-image

அரசாங்கத்தின் தாமதம் தொழிற்றுறையினருக்கே பாதிப்பை ஏற்படுத்தும்...

2025-07-08 21:15:17
news-image

பொரளையில் துப்பாக்கிச் சூடு!

2025-07-08 22:09:50
news-image

செம்மணி விடயம் குறித்து வழக்கு தாக்கல்...

2025-07-08 21:30:26