bestweb

பல்துறைசார் வாய்ப்புக்கள் குறித்து ஆராய முன்வாருங்கள் - சீன மற்றும் தெற்காசிய முதலீட்டாளர்களுக்கு பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திர அழைப்பு

22 Jun, 2025 | 01:03 PM
image

உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம், பசுமை சக்தி, விவசாயம், சுற்றுலா மற்றும் உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் உள்ள வாய்ப்புகளை ஆராய்வதற்கு முன்வருமாறு சீனா மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அழைப்புவிடுத்துள்ளார்.

சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங்கில் கடந்த 18 - 21 வரையில் நடைபெற்ற 9 ஆவது சீன தெற்காசிய கண்காட்சி மற்றும் 6 ஆவது சீன தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தில் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர பங்கேற்றார்.

இவ்வாண்டு கண்காட்சியின் தொனிப்பொருள் நாடாக இலங்கை இடம்பெற்றதால், இக்கண்காட்சி இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

6 ஆவது சீன தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தின் தொடக்க விழாவில் உரையாற்றிய பிரதி அமைச்சர் ஹேமச்சந்திர, மக்கள்தொகைசார் வலிமை, மூலோபாய அமைவிடம், உலகளாவிய வர்த்தகத்தில் அதிகரித்து வரும் பங்கு, கலாச்சார மற்றும் புலமைச் சொத்துக்கள் ஆகியற்றைக் கொண்டுள்ள தெற்காசியாவின் பிராந்திய ஒற்றுமை மற்றும் பகிரப்பட்ட முன்னேற்றத்திற்கு இந்நிகழ்வு முக்கியமானதாக அமைவதாகச் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம், பசுமை சக்தி, விவசாயம், சுற்றுலா மற்றும் உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் உள்ள வாய்ப்புகளை ஆராய்வதற்கு முன்வருமாறு சீனா மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு அழைப்புவிடுத்தார்.

அதேவேளை  வெள்ளிக்கிழமை யுனான் மாகாணத்தின் துணை ஆளுநருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்திய பிரதி அமைச்சர், அதன்போது பதப்படுத்தப்பட்ட உணவு, ஆடை, விவசாயம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் எதிர்கால ஒத்துழைப்பு குறித்து ஆராய்ந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு காங்கேசன்துறை -...

2025-07-17 08:43:12
news-image

இன்றைய வானிலை

2025-07-17 06:35:07
news-image

செம்மணி போன்று கிழக்கிலும் ஜிகாத் அமைப்பினரால்...

2025-07-17 02:52:27
news-image

எனது திட்டமே பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கும்;...

2025-07-17 02:48:22
news-image

புத்தகப்பையுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 -...

2025-07-17 02:42:28
news-image

சஞ்சீவ் கொலை வழக்கில் உதவி செய்த...

2025-07-17 02:31:29
news-image

கல்வியின் டிஜிட்டல்மயமாக்கலுக்கு TikTok-கின் ஆதரவு

2025-07-17 02:15:57
news-image

2026 ஆம் ஆண்டுக்கான பூர்வாங்க  வரவு...

2025-07-17 02:17:52
news-image

அமெரிக்க வரியை குறைக்காவிடின் ஆடைத்துறை வீழ்ச்சியடையும்...

2025-07-16 17:08:03
news-image

1990 பேர் புதிதாக சுகாதார சேவைக்கு...

2025-07-16 22:53:03
news-image

ரஞ்சித் ஆண்டகை மீது பழிபோட அரசு...

2025-07-16 17:08:50
news-image

எதிர்க்கட்சிகளை முடக்க அரசாங்கம் தீவிர கவனம்...

2025-07-16 17:28:29