bestweb

ஈரானில் இருந்து நேபாளம், இலங்கை மக்களை மீட்க அவசர தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியது இந்தியா

22 Jun, 2025 | 11:58 AM
image

நேபாளம் மற்றும் இலங்கையின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் இருந்து இந்தியா மீட்டு அழைத்துவர உள்ளது.

ஈரான் - இஸ்ரேல் போரை தொடர்ந்து ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி ஈரானின் மஷாத் நகரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு விமானம் மூலம் 290 இந்திய மாணவர்கள் டெல்லி அழைத்துவரப்பட்டனர். இதையடுத்து துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத் நகரில் இருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட இரண்டாவது சிறப்பு விமானம் நேற்று காலை டெல்லி வந்து சேர்ந்தது. இதன்மூலம் ஈரானில் இருந்து இதுவரை 517 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

இந்நிலையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள 'எக்ஸ்' பதிவில், "நேபாளம் மற்றும் இலங்கை அரசுகளின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் மீட்டு அனுப்பி வைக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.

டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அவசர உதவிக்கான தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளது. நேபாளம் மற்றும் இலங்கை குடிமக்கள் டெலிகிராம் வாயிலாகவோ அல்லது +989010144557, +989128109115, +989128109109 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்றும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-07-17 06:35:07
news-image

செம்மணி போன்று கிழக்கிலும் ஜிகாத் அமைப்பினரால்...

2025-07-17 02:52:27
news-image

எனது திட்டமே பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கும்;...

2025-07-17 02:48:22
news-image

புத்தகப்பையுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 -...

2025-07-17 02:42:28
news-image

சஞ்சீவ் கொலை வழக்கில் உதவி செய்த...

2025-07-17 02:31:29
news-image

கல்வியின் டிஜிட்டல்மயமாக்கலுக்கு TikTok-கின் ஆதரவு

2025-07-17 02:15:57
news-image

2026 ஆம் ஆண்டுக்கான பூர்வாங்க  வரவு...

2025-07-17 02:17:52
news-image

அமெரிக்க வரியை குறைக்காவிடின் ஆடைத்துறை வீழ்ச்சியடையும்...

2025-07-16 17:08:03
news-image

1990 பேர் புதிதாக சுகாதார சேவைக்கு...

2025-07-16 22:53:03
news-image

ரஞ்சித் ஆண்டகை மீது பழிபோட அரசு...

2025-07-16 17:08:50
news-image

எதிர்க்கட்சிகளை முடக்க அரசாங்கம் தீவிர கவனம்...

2025-07-16 17:28:29
news-image

மூதூர் - பெரியவெளி அகதிமுகாம் படுகொலையின்...

2025-07-17 03:37:55