(நெவில் அன்தனி)
லீட்ஸ், ஹெடிங்லே விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அண்டர்சன் - டெண்டுல்கர் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் பெற்ற 471 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதற்கு அமைய முதல் இன்னிங்ஸில் மேலும் 7 விக்கெட்கள் மீதம் இருக்க, இந்தியாவை விட 262 ஓட்டங்களால் இங்கிலாந்து பின்னிலையில் இருக்கிறது.
போட்டியின் இரண்டாம் நாளான நேற்றுக் காலை தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 359 ஓட்டங்கள் என்ற மிகவும் பலமான நிலையில் இருந்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்தியா மேலதிக 112 ஓட்டங்களுக்கு எஞ்சிய 7 விக்கெட்களை இழந்தது.
முதலாம் நாளன்று சதம் குவித்த யஷஸ்வி ஜய்ஸ்வால், ஷுப்மான் கில் ஆகியோரைத் தொடர்ந்து இரண்டாம் நாளன்று ரிஷாப் பான்டும் சதம் குவித்து அசத்தினார்.
இந்த மூவரில் ரிஷாப் பான்டின் சதம் கிட்டத்தட்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பெறப்பட்ட சதத்திற்கு ஒப்பானதாக இருந்தது. ஷுப்மான் கில்லும் ரிஷாப் பான்ட்டும் 4ஆவது விக்கெட்டில் 209 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் ஷுப்மான் கில் ஆட்டம் இழந்தார்.
ஷுப்மான் கில் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 227 பந்துகளை எதிர்கொண்டு 19 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 147 ஓட்டங்களைப் பெற்றார்.
ஆனால், மறுபக்கத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷாப் பான்ட் 178 பந்துகளில் 12 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 134 ஓட்டங்களைப் பெற்றார்.
முதலாம் நாளன்று யஷஸ்வி ஜய்ஸ்வால் 101 ஓட்டங்களைப் பெற்றார். மத்திய மற்றும் பின்வரிசையில் யாரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை.
பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 66 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் ஜொஷ் டங் 86 ஓட்டங்களையும் வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஸக் க்ரோவ்லி (4) ஆட்டம் இழந்த பின்னர் பென் டக்கெட், ஒல்லி போப் ஆகிய இருவரும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 122 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
பென் டக்கெட் 62 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
ஒல்லி போப் மிகவும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 13 பவுண்டறிகள் உட்பட 100 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
ஜோ ரூட் 28 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார்.
பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா வீழ்ந்த 3 விக்கெட்களையும் 48 ஓட்டங்களுக்கு கைப்பற்றினார்.
மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடரும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM