கொஹுவல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது!

22 Jun, 2025 | 10:56 AM
image

கொஹுவல பொலிஸ் பிரிவின் களுபோவில விகாரை வீதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது கடந்த 15 ஆம் திகதி  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையானது நேற்று சனிக்கிழமை (21) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மல்வானை பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 54 வயதுடைய பெண் சந்தேகநபர்கள் இருவரும்  ரனால பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஆண் சந்தேகநபர் ஒருவருமே செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 15 ஆம் திகதி  மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியது.

அதனடிப்படையில், இந்த துப்பாக்கிச் சூட்டின் முக்கிய சந்தேக நபருக்கு உதவிய  இரண்டு பெண் சந்தேக நபர்கள் மற்றும் ஒரு ஆண் சந்தேக நபர் மல்வானை மற்றும் ரனால பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டு கொஹுவல பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்பள்ளிக் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்தும் பொறுப்பை...

2026-06-06 13:00:59
news-image

சுவிஸில் இருந்து வந்த முதியவர் யாழில்...

2026-06-06 13:07:05
news-image

காலியில் பணம் மற்றும் அதிக போதை...

2026-06-06 12:59:07
news-image

மயிலிட்டியில் மக்களின் காணிகளில் பங்களா அமைத்து...

2026-06-06 12:41:59
news-image

மீகொடை தானசாலை விபத்து: வாகன உரிமையாளர்...

2026-06-06 12:36:25
news-image

வடமாகாணத்தின் மின்விநியோக கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில்...

2026-06-06 13:08:09
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள்...

2026-06-06 12:01:54
news-image

மீகொடை தானசாலை விபத்து: தப்பியோடிய மூவரைக்...

2026-06-06 12:38:33
news-image

சொல்லிசை பாடகர் சங்கீதன் கைது :...

2026-06-06 11:28:18
news-image

கடல் வளப் பாதுகாப்புக்கு சர்வதேச அளவில்...

2026-06-06 11:02:10
news-image

யானைக்கால் நோயை ஏற்படுத்தும் ஒட்டுண்ணி குறித்து...

2026-06-06 10:32:17
news-image

முன்னாள் அமைச்சரின் ஊடகச் செயலாளர் சிஐடியினரால்...

2026-06-06 10:29:22