பிரேசிலின் சாண்டா கேடரினா மாநிலத்தில் பிரியா கிராண்டே நகரில் சனிக்கிழமை (21) காலை வெப்பக்காற்று பலூன் ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் அதில் வெப்பக்காற்று பலூனில் பயணம் செய்த 21 பேரில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு, 13 பேர் காயமடைந்துள்ளனர்.
சாண்டா கேடரினா மாநில தீயணைப்புத் துறையின் தகவல்படி , சுற்றுலாவிற்குப் பயன்படுத்தப்பட்ட பலூன், காலை விமானப் பயணத்தின் போது திடீரென தீப்பிடித்தது. தீ விபத்துக்குப் பின்னர், பலூன் பிரியா கிராண்டே நகரில் தரையில் விழுந்தது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உள்ளூர் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
காயமடைந்த 13 பேர் உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சுற்றுலாப் பயணிகளிடையே வெப்பக்காற்று பலூன்களின் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, சாவ் பாலோ மாநிலத்தில் வானத்திலிருந்து மற்றொரு பலூன் விழுந்ததில் 27 வயது பெண்ணெருவர் உயிழந்ததோடு, 11 பேர் காயமடைந்ததாக உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM