அமெரிக்கா அணுஉலைகளை தாக்கியுள்ளது - ஈரானின் பிராந்திய அதிகாரிகள்

22 Jun, 2025 | 07:26 AM
image

அமெரிக்கா மூன்று அணுஉலைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதை ஈரானின் பிராந்திய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இஸ்பஹான் நட்டன்ஸ் போர்டோ அணுஉலைகள் தாக்கப்பட்டிருக்கலாம் என பிராந்திய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர் என ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

சில மணி நேரங்களுக்கு முன்பு கோம் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டு விரோத இலக்குகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து ஃபோர்டோ அணுசக்தி தளத்தின் ஒரு பகுதி எதிரி விமானப்படைகளால் தாக்கப்பட்டது ”என்று கோம் பிராந்தியத்தின் நெருக்கடி மேலாண்மை மையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக  ஃபார்ஸ் மற்றும் ஐஆர்என்ஏ செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன

ஃபோர்டோ அணு உலையில் வடக்கு ஈரானின் மலைகளில் ஆழமாகப் புதைக்கப்பட்டுள்ளது மேலும் யுரேனியத்தை அதிக தூய்மை தரங்களுக்கு செறிவூட்டப் பயன்படுத்தப்படும் மேம்பட்ட மையவிலக்குகள் உள்ளன. அதன் ஆழம் காரணமாக அமெரிக்காவின் "பதுங்கு குழி" bunker busters குண்டுகள் மட்டுமே இந்த அணு உலையில் சேதத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்பட்டது

மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸ் வசதிகளும் தாக்கப்பட்டதை இஸ்ஃபஹானின் துணை பாதுகாப்பு ஆளுநர் உறுதிப்படுத்தினார்.

இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸில் உள்ள அணுசக்தி நிலையங்களுக்கு அருகில் ஊடுருவல்களை நாங்கள் கண்டோம்" என்று அவர் கூறினார் "எதிரி இலக்குகளை எதிர்கொள்ள" வான் பாதுகாப்பு செயல்படுத்தப்பட்டது ஆனால் "பல வெடிச்சத்தங்கள் கேட்டன" என்று அந்த அதிகாரி கூறியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.

ஈரானிய ஊடகங்களின்படி அந்த நிலையங்கள் முன்பே அகற்றப்பட்டுவிட்டன 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானில் எல்லாம் அழிந்துவிட்டது ; மொஜ்தபா...

2026-07-14 13:04:47
news-image

சவூதி அரேபியா மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்...

2026-07-14 12:58:29
news-image

ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 கப்பல்கள்...

2026-07-14 12:28:49
news-image

நயாகரா நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிர்தப்பிய நபர்!

2026-07-14 12:27:48
news-image

மத்திய கிழக்கு பதற்றம்: உலக சந்தையில்...

2026-07-14 07:20:14
news-image

தண்ணீர் என நினைத்து கழிவறை சுத்திகரிப்பு...

2026-07-13 16:16:01
news-image

ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரின் நடிகர்...

2026-07-13 14:15:05
news-image

அமெரிக்கா - ஈரான் போர் நடவடிக்கைகளினால்...

2026-07-13 11:56:10
news-image

பங்களாதேஷில் கடும் மழை : வெள்ளப்...

2026-07-13 10:51:37
news-image

வெனிசுவேலாவை உலுக்கிய இரட்டை பூமியதிர்ச்சி: பலி...

2026-07-13 10:59:16
news-image

ஐரோப்பாவில் வெப்ப அலையினால் ஜூன் மாத...

2026-07-13 09:44:43
news-image

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் உள்ள பிரபல...

2026-07-13 06:25:54