bestweb

தம்பலகாமம் கண்டி திருகோணமலை 98ம் கட்டை பகுதியில் விபத்து - இருவர் ஸ்தலத்தில் பலி!

Published By: Vishnu

22 Jun, 2025 | 12:57 AM
image

திருகோணமலை- கண்டி  பிரதான வீதி 98 ஆம் கட்டை சந்தியை அண்மித்த  பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் சனிக்கிழமை (21) மாலை இடம் பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

மூதூர் வலயக் கல்வி அலுவலகத்துக்கு சொந்தமான கெப் ரக  வாகனத்துடன் குறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மோதுண்டதில் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது இவ்வாறு உயிரிழந்த இருவரும் வயது (48,50) மதிக்கத்தக்கதாகவும் ஒருவர் 5ம் கட்டை பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றவர் கல்மெடியாவ வடக்கு பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது. குறித்த வீதியின் அருகே வயல் வெளி வீதி ஊடாக தனது வீட்டுக்கு செல்வதற்கு திருப்ப முற்பட்ட வேலையில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய சாரதியை தம்பலகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த இரு சடலங்களும் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பிலான மேலதிக  விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

20 கோடி ரூபாய் பெறுமதியான அதிநவீன...

2025-07-14 03:05:35
news-image

கம்பஹா பல்லெவே பகுதியில் பஸ் மோட்டார்...

2025-07-14 02:58:28
news-image

ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர்...

2025-07-14 01:57:38
news-image

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் ...

2025-07-14 01:54:11
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு...

2025-07-13 17:12:59
news-image

தெமட்டகொடா குப்பை மேட்டுப்பகுதியில் தீ

2025-07-13 22:37:34
news-image

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ்...

2025-07-13 20:18:54
news-image

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை...

2025-07-13 17:12:09
news-image

நித்தகைக்குளம் சீரமைப்புவேலைகளை பார்வையிட்டார் எம்.பி. ரவிகரன்

2025-07-13 21:48:58
news-image

யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல்...

2025-07-13 21:20:29
news-image

நாளை முதல் எதிர்வரும் 18 வரை...

2025-07-13 20:10:28
news-image

பிரதமர் தலைமையில் 2026 புதிய கல்விச்...

2025-07-13 20:29:32