bestweb

திருமண தடையை நீக்கும் பிரத்யேக வழிபாடு..!?

Published By: Digital Desk 2

21 Jun, 2025 | 05:50 PM
image

இன்றைய சூழலில் காதல் திருமணம் அதிகரித்து வரும் தருணத்தில் , பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு உறவினர்கள் - நண்பர்கள் புடை சூழ  மகிழ்வுடன் நடைபெறும் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இத்தகைய திருமணத்திற்கு ஆசைப்படும் ஆண்களும், பெண்களும் ஏதோ சில காரணங்களால் அவர்களுடைய திருமணம் நினைத்த வண்ணம் நடைபெறாமல் தடையும், தாமதமும் ஏற்படுகிறது. இதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஏராளமான சூட்சம பரிகாரங்களை முன்மொழிந்திருக்கிறார்கள்.

திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண்களும், பெண்களும் ஒவ்வொரு மாதத்தில் வரும் செவ்வாய்- வெள்ளி- ஞாயிறு -ஆகிய மூன்று கிழமைகளில் ஏதேனும் ஒரு கிழமையை தெரிவு செய்து, அந்த திகதியில் அருகில் இருக்கும் அம்பாள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.

அங்குள்ள அம்பாளின் சன்னதியில்'  ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ' எனும் மந்திரத்தை உச்சரித்தபடியே குங்குமத்தை அர்ச்சனை செய்யுங்கள். பிறகு 24 நிமிடங்கள் இந்த மந்திரத்தை மனதில் உச்சரித்தபடியே, 'திருமணம் தடையின்றி நடைபெற வேண்டும்' என பிரார்த்தனை செய்யுங்கள்.

பிறகு அந்த குங்குமத்தை சேகரித்து ஒரு குங்குமச்சிமிழில் அடைத்து வீட்டிற்கு எடுத்து வரவேண்டும். அதனை நீங்கள் நாளாந்தம் காலையில் நீராடிய பிறகு நெற்றியில் திலகமாக பூசிக் கொண்டு வந்தால், 48 நாட்களுக்குள் திருமணம் தொடர்பான சாதகமான நிலை ஏற்பட்டு, விரைவில் திருமணம் நடைபெறும்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஷ்ட தெய்வ வழிபாட்டின் மூலம் வெற்றியை...

2025-07-10 16:50:20
news-image

புத்தாக்கம் செய்யும் வலிமையான மந்திரம்..!?

2025-07-09 17:42:30
news-image

பித்ரு தோஷம் விலகுவதற்கான வழிபாடு..!

2025-07-08 17:35:38
news-image

குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைப்பதற்கான சூட்சமக்...

2025-07-07 16:51:34
news-image

கேட்டதை கொடுக்கும் பிரத்யேக நட்சத்திர வழிபாடு..!?

2025-07-05 17:19:05
news-image

பிரபலமடைவதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-07-04 14:46:43
news-image

பணவரவிற்கான தடையை அகற்றும் சூட்சும குறிப்பு..!?

2025-07-03 16:23:18
news-image

நவகிரக தோஷம் நீக்குவதற்கான பரிகாரம்

2025-07-02 17:41:28
news-image

தொழில் விருத்தி அடைவதற்கான சூட்சும வழிபாடு

2025-07-01 18:16:08
news-image

சுறுசுறுப்பாக இருப்பதற்கான சூட்சும வழிமுறை

2025-06-30 18:40:03
news-image

2025 ஜூலை மாத ராசி பலன்கள்

2025-06-30 16:42:02
news-image

வேலை வாய்ப்பை உண்டாக்கும் சூட்சம குறிப்பு

2025-06-27 17:04:55