(எம்.மனோசித்ரா)
இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையால் இதுவரை 5 இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கான மருத்துவ உதவிகளை அங்குள்ள இலங்கை தூதரகம் வழங்கியுள்ளது. மோதல் நிலைமை தனியும் வரை இஸ்ரேலுக்கு இலங்கையர்கள் தொழிலுக்காக அனுப்பப்பட மாட்டார்கள் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் சனிக்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எதிர்பாராத வகையில் மத்திய கிழக்கில் மோதல் நிலைமைகள் உக்கிரமடைந்துள்ளன. எனவே அந்த நாடுகளிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம்.
குறித்த நாடுகளில் தொழில் புரியும் இலங்கை பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் தற்போதைய நிலைமையில் குறித்த நாடுகளுக்கு தொழிலுக்காக செல்வதையும் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம்.
உக்கிரமடைந்துள்ள மோதல் நிலைமை குறைவடையும் வரை இந்த இடைநிறுத்தம் தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கும்.
இஸ்ரேலில் இதுவரையில் 5 இலங்கையர்கள் சிறு காயமடைந்துள்ளனர். இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகம் அவர்களுக்கான மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.
அங்குள்ள இலங்கை தூதுவரும் அவ்வப்போது நிலைமைகளை அவதானித்து அவை தொடர்பில் தெளிவுபடுத்தி வருகின்றார்.
அண்மைக்காலமாக இஸ்ரேலில் தொழில் வாய்ப்புக்களுக்கு அதிக கேள்வி நிலவிய போதிலும், நாம் இலங்கையர்களின் பாதுகாப்பிற்கே முன்னுரிமையளித்துள்ளோம்.
இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்றுகின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM