நாடளாவிய ரீதியில் நான்கு மணி நேர பொலிஸ் நடவடிக்கை

Published By: Raam

13 Jul, 2017 | 05:08 AM
image

நாட­ளா­விய ரீதியில் நேற்று முன்­னெ­டுக்­கப்பட்ட நான்கு மணி நேர விசேட பொலிஸ் நட­வ­டிக்­கை­களில் பல்­வேறு குற்றங்கள் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு பொலி­ஸாரால் தேடப்­பட்ட 110 பேரும் நீதி­மன்­றங்­களால் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்ட 772 பேரும் கைது செய்­யப்பட்­ட­தாக பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான  ருவன் குண­சே­கர தெரி­வித்தார். நேற்று அதி­காலை 1.00 மணி முதல் அதி­காலை 5.00 மணி வரை நான்கு மணி நேரங்கள்  பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர 

வின் ஆலோ­ச­னைக்கு அமைய பிராந்­தி­யங்­களின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பர்கள், பிரதிப் பொலிஸ் மா அதி­பர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சர்­களின் நேரடிக் கட்­டுப்­பாட்டில் சுமார் 14 ஆயிரம் பொலிஸார் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்பட்டு இந்த விசேட நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்பட்­டது. இதன் போதே இவர்கள் கைது செய்­யப்பட்­டுள்­ளனர்.

 இந்த கைது­க­ளுக்கு மேல­தி­க­மாக இந்த நான்கு மணி நேரங்­க­ளுக்குள் 22210 மில்லி கிராம் ஹெரோ­யினும் 40428.82 மில்லி கிராம் கஞ்­சாவும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. ஹெரோயின் தொடர்பில் 85 வழக்­கு­களும் கஞ்சா தொடர்பில் 264 வழக்­கு­களும் இதன் போது பொலி­ஸாரால் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

இத­னை­விட சட்டவிரோத மது­பானம் 37084 லீற்றர்களை இதன் போது கைப்­பற்­றி­யுள்ள பொலிஸார் இது தொடர்பில் 221 வழக்­கு­க­ளையும் பதிவு செய்­துள்­ளனர்.

அத்­துடன் மணல் அகழ்வு, ஏற்றிச்செல்லல், பொது இடத்தில் குடி போதை­யுடன் அநா­க­ரி­க­மாக செயற்­படல், பாதை­களில் கழி­வு­களை கொட்­டுதல் தொடர்பில் 124 வழக்­கு­க­ளையும், கைப்­பற்­றி­யுள்ள பொலிஸார் சட்ட விரோத ஆயு­தங்கள் மூன்­றி­னையும் பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

கைக் குண்­டொன்றும் இதன் போது பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்­டுள்ள நிலையில், குடி போதையில் வாகனம் செலுத்­திய 368 பேருக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில்,  அனுமதிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்திய 320 பேருக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53