உலக பொது மறையான திருக்குறளின் பெயரில் தமிழில் தயாராகி இருக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஏ. ஜே. பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள ' திருக்குறள் ' எனும் தமிழ் திரைப்படத்தில் கலைச்சோழன் , தனலட்சுமி , ஓ எ கே சுந்தர், சுப்ரமணிய சிவா, கொட்டாச்சி, குணா பாபு , பாடினி குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களின் கவனத்தை கவர்ந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் 27 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திருவள்ளுவர் ஆரியர்களின் வழிவந்த இந்துத்துவாவாதியாக ஒரு சாரார் அவருடைய பிம்பத்தை கட்டமைக்க மற்றொருபுறம் பகுத்தறிவாளனான திருவள்ளுவர் தமிழ் மண்ணில் உதித்த சமயம் கடந்த வாதியாக மதச்சார்பின்மையின் அடையாளமாக மற்றொரு பிரிவினர் கட்டமைக்க இந்த தருணத்தில் 2000 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவரின் வாழ்வியலை யதார்த்தமாக இப்படம் பேசுவதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM