வணிக ரீதியிலான சினிமாக்கள் வெளியாகி பார்வையாளர்களிடத்தில் வரவேற்பை பெறுவது போல் தற்போது சுதந்திர படைப்பாளிகளின் சுயாதீன திரைப்படங்களும் கவனம் ஈர்த்து வருகின்றன. அந்தப் பட்டியலில் ' மாயக்கூத்து' எனும் திரைப்படமும் இடம் பிடித்திருக்கிறது.
அறிமுக இயக்குநர் ஏ ஆர் ராகவேந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ' மாயக்கூத்து 'திரைப்படத்தில் மறைந்த நடிகர் டெல்லி கணேஷ், மு. ராமசாமி , சாய் தீனா , பிரகதீஸ்வரன், நாகராஜன், முருகன், ஐஸ்வர்யா, காயத்ரி, ரேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சுந்தர் ராம் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஞ்சனா ராஜகோபாலன் இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராகுல் மூவி மேக்கர்ஸ் மற்றும் அபிமன்யு கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ராகுல் தேவா மற்றும் பிரசாத் ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' படைப்பாளிகளின் சமூக உணர்வை சுட்டிக்காட்டும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களுக்காக திரில்லராகவும் உருவாகி இருக்கிறது. '' என்றார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM