bestweb

சோனியா அகர்வால் நடிக்கும்' கிப்ட் ' படத்தின் டீசர் வெளியீடு

Published By: Digital Desk 2

21 Jun, 2025 | 03:35 PM
image

பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி சிறிய முதலீட்டில் தயாராகும் திரைப்படங்களுக்கு வணிக முத்திரையாக திகழும் நடிகை சோனியா அகர்வால் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'கிப்ட் 'திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.‌

இயக்குநர் பா. பாண்டியன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கிப்ட் ' திரைப்படத்தில் சோனியா அகர்வால் , பிர்லா போஸ், சசி லயா, சூப்பர் குட் சுப்பிரமணி, ரேகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராஜதுரை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சி வி அமரா இசையமைத்திருக்கிறார் .

இன்வெஸ்டிகேட்டட் திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படத்தை பி பி சினிமாஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் பா . பாண்டியன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு காத்திருக்கிறது.  இந்த தருணத்தில் படத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் குற்ற சம்பவம் ஒன்றினை காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சோனியா அகர்வால் நுட்பமாக விசாரிக்கும் காட்சிகள் விறுவிறுப்பாக இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் விஜயை முன்னிறுத்தும் 'யாதும் அறியான்...

2025-07-16 01:39:43
news-image

அறிமுக நடிகர் நாகரத்தினம் நடிக்கும் 'வள்ளி...

2025-07-16 01:35:45
news-image

நடிகர் டீஜே அருணாசலம் நடிக்கும் 'உசுரே...

2025-07-16 01:30:48
news-image

விவாகரத்து விடயங்களை உரக்க பேசும் 'தலைவன்...

2025-07-15 21:58:20
news-image

மூன்றாவது முறையாக இணையும் தமன் அக்ஷன்...

2025-07-14 14:33:53
news-image

நடிகர் சிவராஜ் குமார் நடிக்கும் புதிய...

2025-07-14 14:27:32
news-image

பூஜையுடன் தொடங்கிய 'விஷால் 35'

2025-07-14 14:10:36
news-image

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்

2025-07-14 14:03:06
news-image

நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார்

2025-07-13 09:24:19
news-image

நடிகர் கஜேஷ் நடிக்கும் 'உருட்டு உருட்டு'...

2025-07-12 17:23:46
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி'...

2025-07-12 17:14:49
news-image

துருவா சர்ஜா நடிக்கும் 'கே டி...

2025-07-12 17:11:10