(எம்.மனோசித்ரா)
சர்வதேச நாணய நிதியத்தின் நான்காம் கட்ட மீளாய்வு இடம்பெற்று வருகிறது. இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ள நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர்கள் கூட்டத்தின் போது சாதகமான பதிலை எதிர்பார்க்கின்றோம். நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தை செயற்படுத்துவது இதுவே இறுதியாகக் காணப்பட வேண்டும் என பொருளாதார அபிவிருத்திகள் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொழும்பில் சனிக்கிழமை (21) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சர்வதேச நாணய நிதியத்தின் நான்காம் கட்ட மீளாய்வு இடம்பெற்று வருகிறது. இம்மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதன் போது அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் நாணய நிதியத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
கடந்த வாரம் நாணய நிதியத்துடன் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு இணைந்து செயலமர்வொன்றை ஏற்பாடு செய்திருந்தன.
இதில் நாணய நிதியத்தின் முதலாவது பிரதி பணிப்பாளர் கீதா கோபிநாத் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர். நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை செயற்படுத்துவதில் எமது தலையீட்டினை அவர் பாராட்டியிருந்தார்.
நாட்டின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இதன் போது தெளிவுபடுத்தியிருந்தார்.
நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தை செயற்படுத்துவது இதுவே இறுதியாகக் காணப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.
அந்த வகையில் மீண்டும் நாட்டில் அவ்வாறானதொரு பொருளாதார நெருக்கடி ஏற்படாவாறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதே எமது இலக்காகும்.
எமது ஆட்சியில் நாட்டில் இனியொரு சந்தர்ப்பத்தில் இவ்வாறான நெருக்கடி ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. ட்ரம்பின் வரி தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இருதரப்பு இணக்கப்பாடு எட்டப்பட்டால் மாத்திரமே அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக அது குறித்து அறிவிக்க முடியும். பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாகவே இடம்பெற்று வருகின்றன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM