bestweb

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்-  திரைப்பட விமர்சனம்

Published By: Vishnu

21 Jun, 2025 | 01:59 AM
image

'பெருசு' படத்தின் மூலம் பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் வைபவ்,  நடிப்பில் கொமடி கலாட்டாவாக வெளியாகி இருக்கும் படம் 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்'.  இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் சிரிப்பை ஏற்படுத்தியதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

பசுபதி ( லிவிங்ஸ்டன்) எனும் சட்ட விரோத செயலில் ஈடுபடும் நபரிடம் உதவியாளராக இருக்கிறார் பாண்டி.( வைபவ்)  பாண்டியும்,  அவனது நண்பனும் சிறிய அளவிலான திருட்டுகளில் ஈடுபட்டு காவல்துறையிடம் சிக்குபவர்கள். இந்தத் தருணத்தில் பசுபதியின் பெண்ணான ஜென்னி( அதுல்யா ரவி) வெளிநாட்டில் படித்துவிட்டு இந்தியாவிற்கு திரும்புகிறார்.

அவரைப் பார்த்தவுடன் பாண்டி காதலிக்க தொடங்குகிறார். பசுபதியின் சட்ட விரோத கும்பல் தலைவன் அவனுக்கு கொடுக்கும் வேலையை செய்வதற்காக பாண்டியையும், அவருடைய நண்பனையும் கொள்ளையடிக்க ஓர் இடத்திற்கு செல்லும்படி கட்டளை இடுகிறார்பசுபதி.

பாண்டியும் அவனது நண்பனும் கொள்ளையடித்து விட்டு திரும்பும் வழியில்  கொள்ளையடித்த பணத்தை தொலைத்து விடுகிறார்கள். அந்தப் பணத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் திருப்பித் தருவதற்காக வேறு ஒரு கொள்ளையில்.. வேறு ஒரு கும்பலுடன் பாண்டி ஈடுபடுகிறான். இதில் அவன் வெற்றி பெறுகிறானா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.

சுந்தர் சி பாணியிலான நோ லாஜிக் ஒன்லி மேஜிக் என்ற முறையில் திரைக்கதை எழுதப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்திற்கு முதல் பாதியை விட இரண்டாம் பாதி ரசிகர்களுக்கு ஓரளவு ஆறுதல் கிடைக்கிறது. ஆனால் பட மாளிகையில் ரசிகர்கள் முதல் பாதி வரை பொறுமை காத்து அமர்ந்திருந்தால் ..இரண்டாவது பாதியில் சில இடங்களில் சின்னதாக சிரிக்கலாம். 

நடிகர்கள் தங்களால் இயன்ற அளவிற்கு அவல நகைச்சுவைக்கு நடிக்க முயற்சித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவும் , பின்னணி இசையும் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது.

அதுல்யா ரவியின் அழகும் இளமையும் ரசிகர்களுக்கு ஓகே. நடிகை காயத்ரியின் கவர்ச்சிப் பாடல் டபுள் ஒகே. ஆனந்தராஜ்- சுனில் - மொட்டை ராஜேந்திரன் - ஜான் விஜய் குழுவினர் ரசிகர்களுக்கு சிரிப்பை வர வைக்க முயற்சிக்கிறார்கள்.

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் - பேஸ்மெண்ட்டும் வீக்கு.. பில்டிங்கும் வீக்கு.

தயாரிப்பு : பி டி ஜி யுனிவர்சல்

நடிகர்கள் : வைபவ், அதுல்யா ரவி , மணிகண்டா ராஜேஷ், சுனில் ரெட்டி , மொட்டை ராஜேந்திரன்,  ஜான் விஜய்,  ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த ராஜ் மற்றும் பலர்.

இயக்கம் : விக்ரம் ராஜேஷ்வர் - அருண் கேசவ்

மதிப்பீடு : 2/ 5

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்