bestweb

கருப்பு'த் தங்கமாக ஜொலிப்பாரா சூர்யா?

Published By: Vishnu

21 Jun, 2025 | 01:47 AM
image

' ரெட்ரோ ' படத்தை தொடர்ந்து சூர்யா நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு ' கருப்பு' என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்திருக்கிறார்கள்.

நடிகரும், இயக்குநருமான ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் தயாராகி வரும் 'கருப்பு' திரைப்படத்தில் சூர்யா, திரிஷா, ஷிவதா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு , நட்டி என்கிற நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசைறமைக்கிறார் . எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தருணத்தில் படத்தின் இயக்குநரான ஆர் ஜே பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்திற்கான டைட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது.' கருப்பு' என பெயரிடப்பட்டிருப்பதால்.. நடிகர் சூர்யா காத்து கருப்பாக நடித்திருக்கிறாரா ? அல்லது விடாது கருப்பாக நடித்திருக்கிறாரா?  என்பது விரைவில் தெரியவரும்.

மீண்டும் கிராமிய பின்னணியிலான தலைப்புடன் களமிறங்கும் சூர்யா-  இந்த முறை கருப்புத் தங்கமாக ஜொலிப்பாரா ? என்ற எதிர்பார்ப்பு திரையுலக வணிகர்களிடத்தில் ஏற்பட்டு இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்