வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்காகவே பல வழிகளை கையாள்வார்கள். சில தருணங்களில் அவை வெற்றியைத் தரும். சில தருணங்களில் அவை எதிர்பார்த்த வெற்றியை தருவதில்லை. இத்தகைய தருணங்களில் நாம் எம்முடைய வெற்றிக்கான வழிகளை மாற்றி அமைத்துக் கொள்கிறோம். இப்படி புதிதாக ஏற்படுத்திக் கொண்ட வழிமுறைகளில் வெற்றிகளை தொடர்ந்து பெற வேண்டும் என்றால் .. அதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சூட்சமமான ஒரு தீப வழிபாட்டை தொடர்ந்து பின்பற்றுமாறு வலியுறுத்தி இருக்கிறார்கள்.
நீங்கள் அலுவலகத்தில் பணியாற்றுபவராக இருந்தாலும் அல்லது விற்பனை நிலையத்தின் உரிமையாளராக இருந்தாலும் அல்லது தொழிற்சாலையில் முதலாளியாக இருந்தாலும் உங்களுடைய பிரத்யேக அறையில் விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த எண்ணெய் உங்களுக்கான சூட்சம ஆற்றலை வழங்கும் வல்லமை படைத்தது. தொடர்ந்து 48 நாட்களுக்கு இத்தகைய விளக்கெண்ணெய் மூலம் தீபம் ஏற்றி வழிபட்டால் உங்களுடைய செல்வ நிலை உயர்வதுடன் சந்தோஷமும் அதிகரிப்பதை அனுபவத்தில் காணலாம்.
நீங்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பதுடன் உங்களுடைய குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என விரும்புவீர்கள். இதற்கு உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பசியாறும் உணவு மேஜையில் குறிப்பிட்ட திசையில் வேப்பெண்ணெயை ஊற்றி தீபமேற்ற வேண்டும். இந்த தீப ஒளி ஒரு மணி தியாலம் வரை தொடரலாம். இப்படி தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும்போது குடும்ப சூழலுக்குள் நேர் நிலையான ஆற்றல் பரவி மகிழ்ச்சி மேலோங்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM