bestweb

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: ஜய்ஸ்வால், கில் அபார சதங்கள்; பலமான நிலையில் இந்தியா

Published By: Vishnu

21 Jun, 2025 | 01:39 AM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிராக லீட்ஸ், ஹெடிங்லே விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (20) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் யஷஸ்வி ஜய்ஸ்வால், அணித் தலைவர் ஷுப்மான் கில் ஆகிய இருவரும் குவித்த அபார சதங்களின் உதவியுடன் இந்தியா பலமான நிலையில் உள்ளது.

இங்கிலாந்தினால் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 351 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

இந்திய துடுப்பாட்டத்தில் அறிமுக வீரர் சாய் சுதர்சன் (0) மாத்திரமே பிரகாசிக்கத் தவறினார்.

யஸஸ்வி ஜய்ஸ்வால், கே. எல். ராகுல் ஆகிய இருவரும் 91 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் ராகுல் 42 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து சாய் சுதர்சன் 4 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் ஜய்ஸ்வால், ஷுப்மான் கில் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 129 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

யஷஸ்வி ஜய்ஸ்வால் 159 பந்துகளை எதிர்கொண்டு 16 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 101 ஓட்டங்களைப் பெற்றார். தனது 20ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் யஸஷ்வி ஜய்ஸ்வால் குவித்த ஐந்தாவது சதம் இதுவாகும்.

அதனைத் தொடர்ந்து ஷுப்மான் கில், உதவி அணித் தலைவர் ரிஷாப் பான்ட் ஆகிய இருவரும் மிக இலகுவாக ஓட்டங்களைக் குவித்து பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 138 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டனர்.

ஷுப்மான் கில் 175 பந்துகளை எதிர்கொண்டு 16 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 127 ஓட்டங்களுடனும் ரிஷாப் பான்ட் 96 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள்,  2 சிக்ஸ்கள்  உட்பட 65 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

அணித் தலைவராக விளையாடிய முதல் டெஸ்டிலேயே ஷுப்மான் கில் சதம் குவித்தது விசேட அம்சமாகும். 33ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கில் 6ஆவது சதத்தைக் குவித்ததுடன் 2000 டெஸ்ட் ஓட்டங்களையும் பூர்த்திசெய்தார்.

பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இது இவ்வாறிருக்க, போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் அஹமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் பலியானவர்களுக்கு இரண்டு அணியினரும் மௌன அஞ்சலி செலுத்தியதுடன் கறுப்புப் பட்டி அணிந்து விளையாடினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குசல் அபார சதம், பந்துவீச்சில் அசித்த,...

2025-07-08 22:21:46
news-image

குசல் மெண்டிஸ் அபார சதம் குவிப்பு;...

2025-07-08 18:56:13
news-image

இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது

2025-07-08 14:57:12
news-image

சர்வதேச கிரிக்கெட் நடுவர் பிஸ்மில்லாஹ் ஜான்...

2025-07-08 09:47:46
news-image

மகளிர் ஆசிய கிண்ண தகுதிகாணில் பங்குபற்றிய ...

2025-07-07 15:55:09
news-image

இலங்கை ரி20 கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

2025-07-07 15:25:26
news-image

ஐ லீக் கால்பந்தாட்டம்: கடைசி நேர...

2025-07-06 23:40:30
news-image

இங்கிலாந்தை படுதோல்வி அடையச் செய்து டெஸ்ட்...

2025-07-06 23:28:26
news-image

ஐ லீக் கால்பந்தாட்டம்: அரை இறுதிக்கு...

2025-07-06 13:12:49
news-image

கில் ஓட்டமழை பொழிந்து அபார சாதனை...

2025-07-06 10:16:29
news-image

இலங்கையுடனான 2ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில்...

2025-07-05 22:55:01
news-image

இலங்கைக்கு வெற்றி இலக்கு 249 ஓட்டங்கள்

2025-07-05 18:50:24