அழுத்தமான கதைகளில் நடித்து ரசிகர்களிடம் நல்ல பெயரை சம்பாதித்து இருக்கும் நடிகர் விக்ரம் பிரபு கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'லவ் மேரேஜ் 'எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் இயக்குநரும், நடிகருமான ஆதிக் ரவிச்சந்திரன் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார்.
இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'லவ் மேரேஜ் ' எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு , சுஷ்மிதா பட், ரமேஷ் திலக் , யோகி பாபு , மீனாட்சி தினேஷ், அருள் தாஸ் , முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். திருமணத்திற்காக காத்திருக்கும் முதிர் கண்ணனின் வாழ்வியலை மையப்படுத்தி நகைச்சுவையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அஸ்யூர் பிலிம்ஸ் & ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் 27 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' இந்த திரைப்படம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கிறது. இதுவரை திருமணம் ஆகாத இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் இந்த திரைப்படம் பிடிக்கும். பொதுவாக இன்றைய இளைய தலைமுறையினரை கேள்வி கேட்டால் பிடிக்காது. இப்படி சமூகத்தால் கேள்வி கேட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த திரைப்படம் பிடிக்கும்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM