(நெவில் அன்தனி)
கொழும்பில் உள்ள இலங்கை டென்னிஸ் சங்க களிமண்தரை அரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (20) நிறைவுபெற்ற பில்லி ஜீன் கிங் கிண்ண ப்ளே ஓவ் மகளிர் டென்னிஸ் போட்டியில் ஆசிய பசுபிக் 3ஆம் குழுவில் சம்பியனான இலங்கை 2ஆம் குழுவுக்கு தரமுயர்வு பெற்றுள்ளது.
ஆசிய பசுபிக் 3ஆம் குழு ஏ வலயத்தில் இடம்பெற்ற இலங்கை, பி குழுவுக்கான முதல் சுற்றில் மியன்மாரிடம் தோல்வி அடைந்தபோதிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஏ குழுவில் முதலிடத்தைப் பெற்ற துர்க்மேனிஸ்தானை 2 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு சம்பியனாகி 2ஆம் குழுவுக்கு முன்னேறியது.
பில்லி ஜீன் கிங் கிண்ண ப்ளே ஓவ் சுற்றில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இரண்டாம் குழுவுக்கு இலங்கை தரம் உயர்வு பெற்றிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
இறுதிப் போட்டியின் முதலாவது ஆட்டத்தில் ஆய்நுர் மொவ்லியமோவாவை 6 - 0, 6 - 2 என்ற புள்ளிகளைக் கொண்ட இரண்டு நேர் செட்களில் அக்கீஷா ஹிருந்தி டி சில்வா இலகுவாக வெற்றிகொண்டு இலங்கையை 1 - 0 என்ற ஆட்ட வித்தியாசத்தில் முன்னிலையில் இட்டார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் இலிமா குசேய்நோவாவை 6 - 2, 6 - 0 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் டினாரா டி சில்வா வெற்றிகொண்டார்.
இப் போட்டி முடிவுடன் 2 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்று சம்பியனானது. இதனை அடுத்து இரட்டையர் போட்டி நடத்தப்படவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
பி குழுவில் நேபாளம், கத்தார் ஆகிய அணிகளை தலா 3 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிகொண்டது. மியன்மாரிடம் எதிர்பாராத விதமாக 1 - 2 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆனால், வெற்றிபெற்ற ஆட்டங்களின் (7 - 2) அடிப்படையில் பி குழுவில் இலங்கை முதலாம் இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது.
இலங்கை மகளிர் டென்னிஸ் அணியில் துவினி டி அல்விஸ், ஒன்லி சமரவிக்ரம, இனூக்கி ஜயவீர ஆகியோரும் இடம்பெற்றதுடன் அணியின் விளையாடாத தலைவராக தினேஷ்காந்தன் தங்கராஜா செயல்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM