(நெவில் அன்தனி)
இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் நடைபெறவுள்ள சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டுக்கள் (டிக்கெட்கள்) ஒன்லைனில் விற்பனை செய்யப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
பொது மக்கள் www.srilankacricket.lk என்ற இணையத்தில் நுழைவுச் சீட்டுக்களை கொள்வனவு செய்துகொள்ளலாம்.
இந்த மாதம் 24ஆம் திகதி முதல் ஒன்லைன் நுழைவுச் சீட்டு விற்பனை ஆரம்மாகும். 29ஆம் திகதிமுதல் நுழைவுச்சீட்டு விற்பனை நிலையங்களில் நேரடியாக கொள்வனவு செய்ய முடியும்.
வித்யா மாவத்தையில் உள்ள எஸ்எஸ்சி விற்பனை நிலையத்தில் ஜூன் 9ஆம் திகதியிலிருந்தும் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்க விற்பனை நிலையத்தில் ஜூலை 6ஆம் திகதியிலிருந்தும் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்க விற்பனை நிலையத்தில் ஜூல 11ஆம் திகதியிலிருந்தும் நுழைவுச் சீட்டுக்களை நேரடியாக கொள்வனவு செய்யமுடியும்.
மூன்று மைதானங்களிலும் நுழைவுச் சீட்டின் மிகக் குறைந்த விலை 500 ரூபாவாகும்.
கொழும்பு ஆர். பிரேமதாச அரங்கில் 500 ரூபா முதல் 120,000 ரூபா வரையும் பல்லேகலை அரங்கில் 500 ரூபா முதல் 165,000 ரூபா வரையும் ரங்கிரி தம்புள்ளை அரங்கில் 500 ரூபா முதல் 120,000 ரூபா வரையும் நுழைவுச் சீட்டுக்களின் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM