(நெவில் அன்தனி)
காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது உலக டெஸ்ட் சம்பயின்ஷிப் மற்றும் இருதரப்பு டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் இலங்கையின் கமிந்து மெண்டிஸ் குவித்த அரைச் சதத்தை ஷத்மான் இஸ்லாம், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ ஆகியோரின் அரைச் சதங்கள் விஞ்சியதுடன் பங்களாதேஷ் முன்னிலையில் இருக்கிறது.
போட்டியின் நான்காம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (20) இலங்கையை முதலாவது இன்னிங்ஸில் 485 ஒட்டங்களுக்கு ஆட்டம் இழக்கச் செய்த பங்களாதேஷ் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதற்கு அமைய 2ஆவது இன்னிங்ஸில் மேலும் 7 விக்கெட்கள் மீதம் இருக்க இலங்கையை விட 187 ஓட்டங்களால் பங்களாதேஷ் முன்னிலையில் இருக்கிறது.
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (20) பாடாலை மாணவர்கள் காலி கோட்டைக்கு மேலே உள்ள புல்வெளியில் இருந்து போட்டியைக் கண்டு களித்தமை விசேட அம்சமாகும்.
போட்டியின் ஐந்தாவதும் கடைசியுமான நாளைய தினம் சனிக்கிழமை (21) அதிசயம் நிகழ்ந்தாலன்றி இந்தப் போட்டி சுவாரஸ்யமற்ற முடிவை நோக்கி நகர்வதை தவிர்க்க முடியாது.
பங்களாதேஷின் இரண்டாவது இன்னிங்ஸில் அனாமுல் ஹக் (4), மொமினுள் ஹக் (14) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர்.
ஆனால், ஷத்மான் இஸ்லாம் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 76 ஓட்டங்களைப் பெற்றதால் பங்களாதேஷ் நல்ல நிலையை அடைந்தது.
ஷத்மான் இஸ்லாமும் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவும் 3ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
தொடர்ந்து ஷன்டோ திறமையாகத் துடுப்பெடுத்தாடி இப் போட்டியில் இரண்டாவது தடவையாக 50 ஓட்டங்களுக்கு மேல் பெற்றதுடன் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் முஷ்பிக்குர் ரஹிமுடன் 49 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளார்.
ஷன்டோ 56 ஓட்டங்களுடனும் ரஹீம் 22 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்னனர்.
பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய, தரிந்து ரத்நாயக்க, மிலன் ரத்நாயக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
முன்னதாக, நான்காம் நாள் காலை தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 368 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 485 ஓட்டங்களைப் பெற்றது.
அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா (19), குசல் மெண்டிஸ் (5) ஆகிய இருவரும் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (386 - 6 விக்.)
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ், மிலன் ரத்நாயக்க ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் பெறுமதியான 84 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஆனால் இருவரும் மொத்த எண்ணிக்கை 470 ஓட்டங்களாக இருந்தபோது ஆட்டம் இழந்தனர்.
கமிந்து மெண்டிஸ் தனது 13ஆவது டெஸ்டில் 5ஆவது அரைச் சதத்தைப் பூர்த்திசெய்து 87 ஓட்டங்களுடன் வெளியேறினார். மிலன் ரத்நாயக்க 39 ஓட்டங்களைப் பெற்றார்.
பின்வரிசையில் பிரபாத் ஜயசூரிய 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் நயீம் ஹசன் 121 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஹசன் மஹ்முத் 74 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM