bestweb

விலங்குகளைப் புதுமையுடன் புகைப்படம் பிடிக்கும் கலையின் புது யுகம் - புகழ்பெற்ற புகைப்படக்கலைஞர் லக்ஷிதவின் அனுபவ பகிர்வு

Published By: Digital Desk 3

23 Jun, 2025 | 10:47 AM
image

(சரண்யா பிரதாப்)

புகைப்படங்கள் மூலம் பல கதைகளை வெளிகொணர முடியும். அந்த கதைகள் ஒரு சமூகத்திலுள்ள நல்ல விடயங்களையும், தீய விடயங்களையும் சுட்டிக்காட்டும் வல்லமை கொண்டது.

நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியின் வனவிலங்குகள் மற்றும் இயற்கையைப் பாதுகாக்கும் சங்கத்தின் (NTB WNPS) தேசத்தைக் கட்டியெழுப்பும் மாதாந்த விளக்கவுரை அமர்வு வியாழக்கிழமை (19) நடைபெற்றது.

இந்த அமர்வில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற வனவிலங்குகளைப் புகைப்படம் எடுக்கும் கலைஞரும் சொனி சர்வதேச வர்த்தகநாம தூதருமான லக்ஷித கருணாரத்ன அதிநவீன புகைப்படக் கருவி தொழில்நுட்பங்கள் மற்றும் படைப்புத்துறை மேம்பாடுகள் ஆகியவை வரையறைகளுக்கு அப்பால் நின்று செயற்றிறனான முறையில் எவ்வாறு துணைபுரிகின்றன என்பதைப் பகிர்ந்து கொண்டார்.

புதுமை, புரிந்துணர்வுடன் கூடிய வனவிலங்குகளைப் புகைப்படம் பிடிக்கும் கலையின் புதிய யுகம் பற்றி விளக்கமளித்தார்.

இந்த அமர்வில், 

புகைப்படம் எடுத்தல் துறையானது பாதுகாப்பை வழங்குவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாக எவ்வாறு உருவாகி வருகிறது என்பது ஆராயப்பட்டது.

லக்ஷித தெரிவு செய்யப்பட்ட புகைப்படங்கள்  ஒவ்வொன்றுக்கும் பின்னால் உள்ள உணர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாங்குகளை எடுத்துக்காட்டும் ஒரு கவர்ச்சிகரமான பின்னணியைக் கொண்டதாக அமைந்திருந்தது.

அவற்றில்,  இலங்கையில் அதிகரித்து வரும் மனித-யானை மோதல், பூர்வீக உயிரினங்களிங்களின் இருப்பிடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசும் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் காட்டு உயிரினங்களின் வாழ்விடங்களில் அழிப்பு உள்ளிட்ட சமூக பிரச்சினைகள் சார்ந்த புகைப்படங்களை லக்ஷித கருணாரத்ன  காட்சிப்படுத்தினார்.

புகைப்படங்கள் எவ்வாறு கலை ரீதியாகவும் மற்றும் குரல்கொடுத்துப் போராடுதல் ரீதியாகவும் செயலாற்றுகிறது என்பதை பகிர்ந்து கொண்டார்.

தும்பிக்கையை உயர்த்தி வண்ணம் யானை

அம்பாறைக்குச் சென்ற வேளை புத்தல வீதியில் யானை ஒன்றை கண்டுள்ளார். அந்த  யானை தனது தும்பிக்கையை உயர்த்தி வண்ணம் இருந்துள்ளது. அந்த வீதியில் யானைகள் உணவு தேடி வருவது வழமையான விடயம். ஆனால், இந்த யானை உணவை உண்ட பின்னரும் தும்பிக்கையை உயர்த்தி வண்ணம் இருந்துள்ளது.

இதனை அவதானித்த லக்ஷித்த கருணாரத்ன யானையின் செயலை ஒரு மணித்தியாலம் அவதானித்துள்ளார்.இதன் போது தெரிந்த விடயம் யாதேனில், இந்த யானை கார், முச்சக்கரவண்டி, பஸ் போன்ற வாகனங்களை நோக்கி தும்பிக்கையை உயர்த்தி வண்ணம் நிற்பதை வழக்கமாக கொண்டிருப்பதை அறிந்துள்ளார். பின்னர் யானையின்  இந்த  செயலை 2 மணித்தியாலங்கள் செலவிட்டு புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

முட்டை ஒன்றுடன் ஐரோப்பிய ரொபின்  பறவை 

கொழும்பு - நவம் மாவத்தையில் வாகனத்தரிப்பிடத்தில் கண்ட காட்சி. ஐரோப்பிய ரொபின்  பறவை முட்டை ஒன்றுடன் தரையில் அமர்ந்து இருந்தது.

நான் வாகனத்தை தரிக்க சென்ற போது அவதானித்தேன். சரியாக 11:00 மற்றும் 12:00 மணி இருக்கும். அந்த பறவை முட்டையுடன் அதே இடத்தில் 20 நிமிடங்கள்  இருப்பதை அவதானித்தேன். அந்த முட்டை அடைகாத்து குஞ்சு பொரிக்க தக்க முட்டை. ஆனால் அது குஞ்சு பொறிக்க வில்லை. அதற்கு நிழலாக நின்றது. அதிகரித்த வெப்பத்தினால் குஞ்சு பொரிக்க முடியாமல் இருந்திருக்கும் என எனது நண்பர் சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது எவ்வாறு பறவை அதிக வெப்பம் குறித்து அறிந்தது என்று. மேலும் அந்த பறவை மனிதர்கள் நடமாடும் போதும், வாகனங்கள் செல்லும் போதும் அசையாமல் முட்டையை பாதுகாத்து அங்கேயே இருந்தது. அங்கு கார் ஒன்றின் பக்கத்தில் மற்றுமொரு பறவையும் இருந்தது. நான் புகைப்படம் எடுத்து பின்னர் தொடர்ந்து கண்காணித்து வந்தேன். ஐந்து மாதங்களுக்கு முன்னர் அதன் குஞ்சு பறந்து சென்றதை பார்த்தேன். அனைத்தையும் ஆவணப்படம் செய்துள்ளேன். பாருங்கள் கொழும்பில் இவ்வாறான நிகழ்வு இடம்பெறுகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காதுகளால் பிக்கப் ரக வாகனத்தை இழுத்த...

2025-07-14 16:41:35
news-image

விவாகரத்து பெற்றதை 40 லீற்றர் பாலில்...

2025-07-14 12:12:29
news-image

மெக்சிகோவில் மேயருக்கும் முதலைக்கும் திருமணம் 

2025-07-08 14:14:57
news-image

விலங்குகளைப் புதுமையுடன் புகைப்படம் பிடிக்கும் கலையின்...

2025-06-23 10:47:42
news-image

புத்திசாலி யானைகள் : வைரலாகும் வீடியோ

2025-06-12 19:09:30
news-image

மன்னாரில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான...

2025-06-09 14:07:39
news-image

கடலும் காடும் கலந்த “ஆழிவனம்” 

2025-06-09 14:10:39
news-image

ரயிலுக்குள் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன்...

2025-06-07 12:57:45
news-image

29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்தடை குறித்து...

2025-05-30 14:45:05
news-image

அமானுஷ்யங்கள் நிறைந்த ஜப்பானின் “தற்கொலை காடு”

2025-05-28 16:57:48
news-image

நுவரெலியாவில் இயற்கை அழகின் மையப்பகுதியாக திகழும்...

2025-05-27 18:37:56
news-image

பொலிஸ் அதிகாரியை தாக்கிய “குற்றவாளி” பூனை...

2025-05-24 18:09:10