ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டனர் தம்புத்தேகம மத்திய கல்லூரியின் மாணவர்கள்!

Published By: Digital Desk 2

20 Jun, 2025 | 05:47 PM
image

அநுராதபுரம், தம்புத்தேகம மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று, வருடாந்த கல்விச் சுற்றுலாவின் போது  ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடுவதற்காக வெள்ளிக்கிழமை (20) பிற்பகல் வருகை தந்தனர்.

ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவுடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தும் ‘Vision’  நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த மாணவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது.

ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற வளாகத்தை பார்வையிட்ட பின்னர் அதன் வரலாறு குறித்து மாணவர்களுக்கு தெளிவூட்டப்பட்டது. 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் எண்ணக்கருவிற்கு அமைவாக செயல்படுத்தப்படும் Clean Sri Lanka வேலைத்திட்டம், நிறைவேற்று அதிகாரத்தின் பணிகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பில் இந்த பாடசாலையின் ஆசிரியர் குழாம் மற்றும் மாணவர்களுக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி சட்ட ஆலோசகர் ஜே.எம். விஜேபண்டார, சுற்றாடலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை  எடுத்துக் காட்டும் வகையில், பாடசாலைக்கு பெறுமதியான மரக் கன்று ஒன்றையும்  வழங்கிவைத்தார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் கே.எம்.என்.குமாரசிங்க, முப்படை பாதுகாப்பு ஒருங்கிணைப்பு பிரிவின் பிரதிப் பணிப்பாளர் கேணல் தனஞ்சய செனரத், தம்புத்தேகம மத்திய கல்லூரியின் உப அதிபர் எம். ஜீ.  அசங்க விஜேசூரிய மற்றும் ஆசிரியர்கள் குழு உள்ளிட்ட பலர் இந்த சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய சிறைச்சாலைகளை நிர்மாணிப்பது அரசாங்கத்தின் வெற்றியல்ல...

2026-07-20 12:24:27
news-image

மர்மமான உயிரிழப்புக்கக்களை தற்கொலை என்று அடையாளப்படுத்த...

2026-07-20 14:27:32
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு ஜனநாயகத்திற்கு விழும்...

2026-07-20 14:28:29
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பது தொடர்பில்...

2026-07-20 20:19:51
news-image

போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு சிகிச்சை; கடத்தல்காரர்களுக்கு கடும்...

2026-07-20 14:51:24
news-image

அனில் ஜயந்த பெர்னாண்டோ பெயரில் பரவும்...

2026-07-20 15:13:37
news-image

நெல்லுக்கு அதிக விலையால் நுகர்வோரே அதிகம்...

2026-07-20 15:33:04
news-image

நீதிமன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புமாறு ஜனாதிபதியிடம்...

2026-07-20 15:51:34
news-image

இலங்கையானது ஒரு குற்றவியல் அரசாகவே செயற்பட்டு...

2026-07-20 17:37:04
news-image

ஒருசில விடயங்களை பகிரங்கப்படுத்தப் போவதில்லை -...

2026-07-20 20:18:52
news-image

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வை நேரில்...

2026-07-20 17:39:03
news-image

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை 33% ஆக...

2026-07-20 17:39:44