முல்லைத்தீவு- உடையார்கட்டு பகுதியில், சுகாதார விதிமுறைகளை மீறி காலாவதியான மற்றும் சீர்கேட்டுள்ள உணவுப் பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ரூபா. 40,000 தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர்கள், வெள்ளிக்கிழமை (20) புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் மற்றும் உடையார்கட்டு பகுதிகளில் உள்ள பிரபல விற்பனை நிலையங்களில் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.
சோதனையின் போது காலாவதியான 73 கிராம் அடங்கிய 32 Maggie நூடில்ஸ் பைக்கற்றுகள், கச்சான் பிஸ்கட் போத்தல்கள், 2 மிக்சர் போத்தல்கள், 5 மிளகாய் தூள் பைக்கற்றுகள், 3 சமோசா, 11 தேயிலை பைக்கற்றுகள், 4 கிலோ கருவாடு, 1 கிலோ மிளகு என்பன கைப்பற்றப்பட்டன.
அத்தோடு, மருத்துவ சான்றிதழ் இல்லாமை, உணவக அனுமதி சான்றிதழ் இல்லாமை, முகச்சவரம் செய்யப்படாமை, குடிநீர் பகுப்பாய்வு சான்றிதல் இன்மை, குப்பைத்தொட்டி இல்லாமை, அனுமதியின்றி விற்பனை செய்தல் போன்ற சுகாதார குறைபாடுகள் பதிவாகியுள்ளன.
இவை தொடர்பாக, உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ் மற்றும் வள்ளிபுனம் சுகாதார பரிசோதகர் றொய்ஸ்ரன் ஜோய் ஆகியோர் இணைந்து மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர்.
இன்றைய தினமே குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், விற்பனை நிலைய உரிமையாளரை குற்றவாளியாகத் தீர்மானித்து ரூபா. 40,000 நிதி தண்டனையும், கடுமையான எச்சரிக்கையும் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM