புதிய சட்டமியற்றியேனும் கெஹெலிய தண்டிக்கப்பட வேண்டும் ; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

20 Jun, 2025 | 04:12 PM
image

(எம்.மனோசித்ரா)

கெஹெலிய ரம்புக்வெல்ல தேசிய குற்றமிழைத்திருக்கின்றார். நடைமுறையிலுள்ள சட்டங்கள் அவருக்கு தண்டனை வழங்குவதற்கு போதாவிட்டால், புதிய சட்டமியற்றியேனும் நீதியை நிலைநாட்ட வேண்டும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கெஹெலிய ரம்புக்வெல்ல தேசிய குற்றமிழைத்திருக்கின்றார். அவருக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டம் போதாவிட்டால், புதிதாக சட்டமியற்றியேனும் தண்டனை வழங்கப்பட வேண்டும். 

அவரது செயற்பாடுகளால் பல உயிர்கள் பறிபோயிருக்கின்றன. மருந்தின் மீதிருந்த நம்பிக்கையால் விசேட வைத்திய நிபுணர்கள் கூட நோயாளர்களுக்கு குறித்த மருந்துகளை வழங்கியிருக்கின்றனர்.

இவர்கள் அனைவரையும் ஏமாற்றும் வகையிலேயே கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவினர் செயற்பட்டிருக்கின்றனர். 

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய அவருக்கு விரைவில் உரிய தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈ.பி.எப்., ஈ.ரீ.எப். இணைப்புக்கு எதிர்ப்பு; தொழிற்சங்கங்கள்...

2026-07-17 14:34:16
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள் : வழக்கு...

2026-07-17 16:18:43
news-image

புகைப்பிடிப்பதால் தினமும் 50 உயிரிழப்புகள்; ஆண்டுக்கு...

2026-07-17 16:19:13
news-image

எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது...

2026-07-17 16:19:41
news-image

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படும்...

2026-07-17 16:20:09
news-image

மண்ணெண்ணெயில் இயங்கிய 100 பஸ்கள் அடையாளம்;...

2026-07-17 22:26:04
news-image

அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு...

2026-07-17 22:20:42
news-image

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு...

2026-07-17 22:08:58
news-image

தொழிற்கல்வியை வலுப்படுத்த 2027 வரவுசெலவுத் திட்டத்தில்...

2026-07-17 22:06:56
news-image

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும்...

2026-07-17 21:48:04
news-image

சிறுபான்மைக் கட்சிகளின் புதிய கூட்டணி எமக்குத்...

2026-07-17 14:35:02
news-image

ஊழியர்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது...

2026-07-17 16:33:07