பன்றிக் காய்ச்சல் தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியீடு

20 Jun, 2025 | 04:12 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் உள்ள அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளையும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொற்று பரவக் கூடிய அல்லது அதிக ஆபத்துள்ள பகுதிகளாகக் குறிப்பிட்டு சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவிப்பு விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவல கடந்த 13ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலில் பன்றிகளை அதிக ஆபத்துள்ள விலங்குகளாகவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் இலங்கையின் பல்வேறு பிரதேச செயலகங்களில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளதாகவும், அது மேலும் பரவ வாய்ப்புள்ளது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பிரதேச கால்நடை அலுவலரால் வழங்கப்பட்ட அனுமதியின்றி, பாதிக்கப்பட்ட அல்லது அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்குள் அல்லது வெளியே ஆபத்தான பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் தொடர்புடைய பொருட்களை கொண்டு செல்வது, அகற்றுவது, எடுத்துச் செல்வது அல்லது அப்புறப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும் இறைச்சிக்காக பாதிக்கப்பட்ட விலங்குகளை வெட்டுவது அல்லது நேரடி விலங்கு சந்தைகளை இயக்க அதிக ஆபத்துள்ள விலங்குகளைப் பயன்படுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமல் ராஜபக்‌ஷக்கு சிறைச்சாலைகளில் அதிக வாக்குகள்:...

2026-08-09 17:51:42
news-image

தென் கொரியாவில் மத சுதந்திரம், கருத்துச்...

2026-08-09 22:16:45
news-image

அரசியலமைப்பு திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது...

2026-08-09 17:53:18
news-image

மாகாண சபை தேர்தல் தாமதத்திற்கு எல்லை...

2026-08-09 17:56:52
news-image

எந்தவொரு வரைவு ஆவணமும் உருவாக்கப்படவில்லை: சிறிதரனுக்கு...

2026-08-09 17:53:01
news-image

நாமல் ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல்...

2026-08-09 20:19:40
news-image

சுற்றுலா வீசாவில் வந்து சட்டவிரோதமாகப் பணியாற்றிய...

2026-08-09 18:04:26
news-image

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக...

2026-08-09 17:33:26
news-image

சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார், கட்டார்...

2026-08-09 17:16:31
news-image

அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாயவில்...

2026-08-09 16:37:05
news-image

பொலிஸாரின் பெயரில் இணையவழி மோசடி ;...

2026-08-09 17:20:47
news-image

கஹட்டகஸ்திகிலியவில் கஜமுத்துக்களுடன் இருவர் கைது !

2026-08-09 16:28:07