ஈரானின் ஆன்மீகதலைவரின் சிரேஸ்ட ஆலோசகர் அலிஷாம்கனி இஸ்ரேலின் தாக்குதலினால் கொல்லப்படவில்லை அவர் உயிருடன் இருக்கின்றார் என ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் முக்கிய இராணுவ அரசியல் பிரமுகரான அலிஷாம் கனி கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் அறிவித்திருந்தது.
எனினும் அவர் தான் உயிருடன் இருக்கின்றார் என தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியை ஈரான் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
நான் உயிருடன் இருக்கின்றேன் தியாகம் செய்வதற்கு தயாராகயிருக்கின்றேன் என அவர் அந்த செய்தியில் தெரிவித்துள்ளார்.ஈரானின் ஆன்மீக தலைவருக்கான செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வெற்றி அருகில் உள்ளது, ஈரானின் பெயர் வரலாற்றின் உச்சியில் என்றும் பிரகாசிக்கும் என அலிஷாம் கனி குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேல் 13ம் திகதி மேற்கொண்ட தாக்குதலில் இவர் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதேவேளை ஷாம்கனி உயிரிழக்கவில்லை,கடும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள ஈரான் ஊடகங்கள் அவர் தற்போது ஆபத்தான நிலையில் இல்லை என குறிப்பிட்டுள்ளன.
எனினும் அவரது புதிய படங்கள் எவையும் வெளியாகவில்லை.
ஷாம்கனி ஈரானின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியுள்ளதுடன் ,ஈரானின் புரட்சிகர காவல் படையணியில் பல சிரேஸ்ட பதவிகளை வகித்துள்ளார்.
வோசிங்டன் ஐரோப்பிய கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவரான இவர் அமெரிக்கா ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தைகளின் போது ஈரானிற்கான முக்கிய ஆலோசகராக செயற்பட்டிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM