உலக வங்கியானது இலங்கைக்கு 1340 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதி மற்றும் தொழிநுட்ப உதவியாளர்களை இரண்டாவது முறையாகவும் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் கீழ் வழங்கத் தீர்மானித்துள்ளது. 

இந்தக் கடன் உதவியானது மூன்று வருட கால வரையறையை கொண்டதுடன் இதற்கு முன்னரும் இலங்கை 660 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் உதவியை கடந்து 2014 -2017 ஆண்டு கால எல்லைக்குள் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உலக வங்கி நிர்வாகிக்கும் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே குறித்த கடனுதவிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.