(நெவில் அன்தனி)
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட முதலாவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் இருதரப்பு டெஸ்ட் தொடர் லீட்ஸ் ஹெடிங்லே விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (20) ஆரம்பமாகவுள்ளது.
ரவிச்சந்திரன் அஷ்வின், ரோஹித் ஷர்மா, விராத் கோஹ்லி ஆகியோரின் ஓய்வுக்குப் பின்னர் இந்தியா விளையாடும் முதுலாவது டெஸ்ட் போட்டி இதுவாகும்.
அத்துடன் ஷப்மான் கில்லின் புதிய தலைமையில் இந்திய அணி களம் இறங்கவுள்ளது. அத்துடன் இந்திய அணியின் புதிய உதவித் தலைவராக ரிஷாப் பான்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது இலகுவானதல்ல. அத்துடன் 3 சிரேஷ்ட வீரர்கள் ஓய்வுபெற்றுள்ள நிலையில் இளம் இந்திய அணியினர் இங்கிலாந்தில் சாதிப்பார்களா என்ற கேள்வியும் எழவே செய்கிறது.
ஆரம்ப வீரர் ரோஹித் ஷர்மா, 3ஆம் இலக்க வீரர் விராத் கோஹ்லி ஆகியோர் இல்லாத நிலையில் இந்திய அணியின் புதிய ஆரம்ப ஜோடியாக யஷஸ்வி ஜய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகிய இருவரும் களம் இறங்கவுள்ளனர்.
அதேவேளை, தமிழக வீரர் சாய் சுதர்சன் 3ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் விளையாடினால் அறிமுக வீரராக அணியில் இடம்பெறுவார்.
தொடர்ந்து அணித் தலைவர் ஷுப்மான் கில், உதவித் தலைவர் ரிஷாப் பான்ட், கருண் நாயர், சகலதுறை வீரர் ரவிந்த்ர ஜடேஜா ஆகியோர் துடுப்பாட்ட வரிசையில் 7ஆம் இலக்கம் வரை இடம்பெறுவர்.
சுழல்பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜாவுடன் யாரை களம் இறக்குவது என்பதில் இந்திய அணி இன்னும் முடிவுசெய்யவில்லை. பெரும்பாலும் குல்தீப் யாதவ் இறுதி அணியில் இடம்பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், ஷர்துல் தாகூர், நிட்டிஷ் குமார் ஆகியோருடன் அவர் போட்டியிடவேண்டி வரலாம்.
ப்ராசித் கிரிஷ்ணா, ஜஸ்ப்ரிட் பும்ரா, மொஹமத் சிராஜ் ஆகிய மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் இறுதி அணியில் இடம்பெறவுள்ளனர்.
இங்கிலாந்து தனது இறுதி பதினோருவரை ஏற்கனவே தீர்மானித்துவிட்டது.
இதற்கு அமைய ஸக் க்ரோலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹெரி ப்றூக், அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் , ஜெமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், ப்றைடன் கார்ஸ், ஜொஷ் டங், ஷொயெப் பஷிர் ஆகியோர் இங்திலாந்து அணியில் இடம்பெறவுள்ளனர்.
இந்த இரண்டு அணிகளும் 1932ஆம் ஆண்டிலிருந்து கடந்த 93 வருடங்களில் 136 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன.
அவற்றில் இங்கிலாந்து 51 போட்டிகளிலும் இந்தியா 35 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. 50 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM