இலங்கை சுகாதார அமைச்சின் ஆயுர்வேத திணைக்களம் மற்றும் இலங்கையின் முக்கிய யோகா நிறுவனங்களுடன் இந்திய தூதரகம் இணைந்து 11 ஆவது சர்வதேச யோகா தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வு ஜூன் 21 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வானது ஐக்கிய நாடுகளின் பொதுசபையில் 2014ம் ஆண்டு இந்தியா முன்மொழிந்த தீர்மானத்தின்படி, ஜூன் 21ம் திகதி ‘சர்வதேச யோகா தினமாக’ பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 2015 முதல் ஒவ்வொரு ஆண்டும் இலங்கையில் சர்வதேச யோகா தினம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த தீர்மானத்திற்கு இலங்கை உட்பட 170க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
யோகா என்பது இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்தின் அளப்பரிய பரிசாகும். இது உடல் மற்றும் மனதின் ஒருமைமைக்கான அருமையான வழியாகும். யோகாவும், ஆயுர்வேதமும் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான பண்பாட்டு பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக காணப்படுகின்றன.
.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM