ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா கமேனி கொல்லப்பட்டால் ரஸ்யா எதிர்மறையாக எதிர்வினையாற்றும் என கிரெம்ளின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ஸ்கைநியுசிற்கு தெரிவித்துள்ளார்.
கமேனி கொல்லப்படுவதை ஏற்க முடியாது அது பண்டோரா பெட்டியை திறந்துவிடும் ( பல குழப்பங்களை பிரச்சினைகளை உருவாக்கும்) என அவர் தெரிவித்துள்ளார்.
நிலைமைமிகவும் பதட்டகரமானதாக உள்ளது பிராந்தியத்திற்கு மாத்திரமல்ல உலகிற்கும் ஆபத்தானது என அவர் தெரிவித்துள்ளார்.
மோதலில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது இன்னும் ஆபத்தானது,இது இன்னுமொரு சுற்று மோதலிற்கும் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும் என கிரெம்ளின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஈரானில் ஆட்சி மாற்றம் என்பது கற்பனை செய்ய முடியாதது,அது ஏற்றுக்கொள்ள முடியாததாக காணப்படும் அது பற்றி பேசுவது கூட ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என வோசிங்டனிற்கு மெல்லிய எச்சரிக்கையை விடுக்கும் விதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் கமேனி கொல்லப்பட்டால் ரஸ்யா என்ன செய்யும் என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துள்ள கிரெம்ளின் பேச்சாளர் அவ்வாறு நடந்தால் அது ஈரானிற்குள் உள் இருந்து எதிர்வினைகளை உருவாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
கமேனி கொல்லப்பட்டால் ஈரானிற்குள் தீவிர உணர்வுகள் உருவாகும்,கமேனியை கொல்வது குறித்து பேசுபவர்கள் தாங்கள் பண்டோர பெட்டியை திறக்கின்றனர் என்பதை மனதில் வைத்திருக்கவேண்டும் எனஅவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் இஸ்ரேல் மோதலை நிறுத்துவதற்கு மத்தியஸ்தம் வகிப்பதற்கு ரஸ்ய ஜனாதிபதி முன்வந்த போதிலும் அமெரிக்க ஜனாதிபதி அதனை நிராகரித்துள்ளார்.
உங்கள் மோதலிற்கு தீர்வை காணமுயலுங்கள் என புட்டினிடம் தான் தெரிவித்ததாக புதன்கிழமை டிரம்ப் தெரிவித்திருந்தார்.
எனினும் அமெரிக்க ஜனாதிபதியின் வார்த்தைகள் அவமதிக்கும் விதத்தில் காணப்படுகின்றன என்பதை நிராகரித்துள்ள கிரௌம்ளின் பேச்சாளர் டிரம்ப் ஒருவிதமான பாணியில் பேசுவார் அது அவரின் தனித்துவமான மொழி,நாங்கள் ஒரளவு சகிப்புத்தன்மையுடன் இருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM