கொக்கிளாய் பிரதேசத்திற்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியிலுள்ள கடலில் அடித்துச்செல்லப்பட்ட யானையை இலங்கை கடற்படையினர் காப்பற்றியுள்ளனர்.

குறித்த கடலில் நேற்று தத்தளித்த யானையை ஏழு கடற்படை வீரர்கள் இணைந்து கடற்படையின் அதிவேக விசைப்படகின் உதவியுடன் மீட்டு கரை சேர்த்தனர்.

பல போராட்டங்களின் மத்தியில் வனத்துறையினரோடு இணைந்து யானையை மீட்ட கடற்படையினர் புல்மோட்டை யான் ஓயாவிற்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட யானையை வனவிலங்குத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுதுள்ளனர்.