இந்த வருடத்தில் ஆறு மாதங்களில் வீதி விபத்துகளில் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துகள், வீதிகளுக்கு தகுதியற்ற வாகனங்கள் மற்றும் ஒழுங்கற்ற சாரதிகளால் ஏற்படுவதாக அவர் சுட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர்,
கடந்த ஆண்டு (2024) வீதி விபத்துகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைத் தவிர, 7,152 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
2025 ஜனவரி 1, முதல் ஜூன் 15, 2025 வரை, இந்த 6 மாதங்களில் 1,133 வீதி விபத்துகளில் கிட்டத்தட்ட 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 28,000 பேர் உயிரிழந்துள்ளனர். கவலைக்குரிய விடயம் என்னவென்றால், 7 பேர் தங்கள் கடமைகளுக்காக வீட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேறினால் மாலை அவர்களது உயிரற்ற உடல் மட்டுமே வீடு திரும்புகிறது.
வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரி பாகங்கள் ஜூலை 1 ஆம் திகதி முதல் அகற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM