(நெவில் அன்தனி)
பங்களாதேஷுக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸட் சம்பியன்ஷிப் மற்றும் இருதரப்பு தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்க குவித்த அபார சதத்தின் உதவியடன் இலங்கை துணிச்சலான பதில் அளித்துள்ளது.
இது இவ்வாறிருக்க தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஏஞ்சலோ மெத்யூஸ் களம் புகுந்தபோதும் களம் விட்டு வெளியேறியபோதும் அவருக்க பலத்த மரியாதை செலுத்தப்பட்டது.
பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸில் பெற்ற 495 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் இலங்கை போட்டியின் மூன்றாம் நாளான இன்று வியாழக்கிழமை (19) ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 368 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
முதல் இன்னிங்ஸில் மேலும் 6 விக்கெட்கள் மீதம் இருக்க பங்களாதேஷைவிட 127 ஓட்டங்களால் இலங்கை பின்னிலையில் இருக்கிறது.
மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க தனது 17ஆவது டெஸ்ட் போட்டியில் 3ஆவது சதத்தைக் குவித்ததுடன், 64ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது டெஸ்ட் போட்டிகளில் 1000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தார்.
பெத்தும் நிஸ்ஸன்கவும் 31வயதான அறிமுக வீரர் லஹிரு உதாரவும் 47 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது லஹிரு உதார 29 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அதன் பின்னர் பெத்தும் நிஸ்ஸன்கவுடன் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த தினேஷ் சந்திமால் அரைச் சதம் பெற்றதுடன் 157 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டார்.
தினேஷ் சந்திமால் 119 பந்துகளில் 4 பவுண்டறிகளுடன் 54 ஓட்டங்களைப் பெற்றார்.
அவரைத் தொடர்ந்து ஏஞ்சலோ மெத்யூஸ் தனது கடைசி டெஸ்டில் விளையாட களம் புகுந்தபோது பங்களாதேஷ் வீரர்களும் மத்தியஸ்தர்களும் இருமருங்கில் வரிசையாக நின்று அவருக்கு மரியாதை செலுத்தி வரவேற்றனர்.
நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஏஞ்சலோ மெத்யூஸ் 3 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 39 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்து மைதானத்தை விட்டு வெளியேறியபோது அரங்கில் இருந்த அனைவரும் கரகோஷம் எழுப்பி அவரை பாராட்டி கௌரவித்தனர்.
மறுபக்கத்தில் திறமையாகவும் ஆக்ரோஷமாகவும் துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க 256 பந்துகளை எதிர்கொண்டு 23 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 187 ஓட்டங்களைக் குவித்தார். டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும்.
கமிந்து மெண்டிஸ் 37 ஓட்டங்களுடனும் தனஞ்சய டி சில்வா 17 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.
போட்டியின் 3ஆம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்புக்கு 484 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பங்களாதேஷ் மொத்த எண்ணிக்கை 495 ஓட்டங்களாக இருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது.
துடுப்பாட்டத்தில் முஷ்பிக்குர் ரஹிம் 163 ஓட்டங்களையும் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 148 ஓட்டங்களையும் லிட்டன் தாஸ் 90 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 85 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மிலன் ரத்நாயக்க 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அறிமுக வீரர் தரிந்து ரத்நாயக்க 196 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM