bestweb

நோய்க்கிருமிகளினால் பரவும் நோய்களைப் பற்றிய ஆராய்ச்சியை ஆதரிப்பதற்காக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பீட் கிரேடி சேம்பரை நன்கொடையாக வழங்கும் கொட்றிச் ஸ்ரீலங்கா

19 Jun, 2025 | 07:09 PM
image

இலங்கையின் பொதுச் சுகாதார உட்கட்டமைப்பை ஆதரிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, கொட்றிச் ஸ்ரீலங்கா கொழும்பிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (MRI) சிறப்பு பூச்சியியல் ஆராய்ச்சி வசதியான பீட் கிரேடி சேம்பரை ஒப்படைத்துள்ளது. இதன் மூலம், குறிப்பாக டெங்கு, மலேரியா போன்ற நுளம்பினால் பரவும் நோய்களைக் குறிவைத்து நோய்க்கிருமி கட்டுப்பாடு பற்றிய மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ள MRIக்கு வலுவூட்டப்படுகிறது.

பீட் கிரேடி சேம்பரின் மூலம் ஆராய்ச்சியாளர்கள், கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் நிஜ உலக நிலைமைகளை உருவகப்படுத்தவும், பூச்சிகொல்லிகளின் செயல்திறனை மதிப்பிடவும், நுளம்புகளின் நடத்தையை ஆய்வு செய்யவும் வழி கிடைக்கிறது. நோய் பரவுதல் பற்றிய நாட்டின் விஞ்ஞான ரீதியான பதிற் செயற்பாட்டை மேம்படுத்துவதற்கும் இந்த வசதி அவசியமானதாகக் கருதப்படுகிறது.

இலங்கைக் குடும்பங்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கான கொட்றிச்சின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த நன்கொடை பிரதிபலிக்கிறது. அதன் பரவலாக நம்பகமான பூச்சிக்கொல்லி வர்த்தக நாமங்களான குட்நைட் (Goodknight) மற்றும் ஹிட்(HIT) மூலம், கொட்றிச் நிறுவனம் ஆனது நுளம்புகளால் பரவும் நோய்களை எதிர்த்துப் போராடுவதிலும், தடுப்பு சுகாதார பராமரிப்பை ஊக்குவிப்பதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

கொட்றிச் நுகர்வோர் தயாரிப்புகள் லிமிட்டெட்டின் (Godrej Consumer Products Ltd) சார்க் (SAARC) வணிகத் தலைவர் சமீர் சூரியவன்ஷ கருத்துத் தெரிவிக்கையில், “கொட்றிச் இல் எங்கள் நோக்கம் எங்கள் தயாரிப்புகளுக்கு அப்பால் அர்த்தமுள்ள சமூகத் தாக்கத்தை நோக்கி விரிவடைந்ததாக உள்ளதென நாங்கள் நம்புகிறோம். இந்த முதலீடு இலங்கையுடனான எங்கள் நீண்டகால கூட்டுமுயற்சிக்கும், பொதுச் சுகாதார விளைவுகளை இயக்க விஞ்ஞான ரீதியிலும் புதுமைகளை அறிமுகப்படுத்துவதிலும் நாம் கொண்டுள்ள நம்பிக்கைக்கு ஒரு சான்றாக உள்ளது. இந்த முக்கிய பணியில் MRIக்கு ஆதரவளிப்பதையிட்டு நாங்கள் பெருமைப்படுகிறோம்” எனக் குறிப்பிட்டார்.

கொட்றிச் ஸ்ரீலங்காவின் (Godrej Sri Lanka) இலங்கைக்கான தலைவர் திலீப்ப கிரகொரி கூறுகையில், “பல தசாப்தங்களாக, கொட்றிச் எங்கள் வர்த்தக நாமங்களான  குட்நைட் (Goodknight) மற்றும் ஹிட் (HIT) மூலம் இலங்கைக் குடும்பங்களின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றது. 

இந்த முயற்சி ஒரு பாதுகாப்பான, ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க உதவுகின்ற எமது பயணத்தில் மற்றொரு படியாகும். உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கூடிய முதலீடுகளுடன் இந்த மரபைத் தொடர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இந்த ஒத்துழைப்பானது, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே ஆழமான விஞ்ஞான ரீதியிலான ஈடுபாட்டிற்கும் வழிவகுக்கின்றது. இந்தியாவில் உள்ள கொட்றிச் பூச்சிக்கொல்லிகள் பிரிவில், மிகப் பெரும் அல்லது மிகவும் மேம்பட்ட ஆராய்ச்சி வசதிகளில் ஒன்று இதுவாகும். இந்த நன்கொடையுடன், மேம்பட்ட தகவல் பரிமாற்றம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் எல்லை தாண்டிய அறிவுப் பரிமாற்றத்திற்கான வலுவான ஆற்றல் உள்ளது. இது பிராந்தியம் முழுவதும் பொதுச் சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்துகிறது. நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் தேசிய திறன்களை வலுப்படுத்த நீண்டகால, நிலையான கூட்டுமுயற்சிகளை உருவாக்குவதில் கொட்றிச் இன் நம்பிக்கையை இந்த நன்கொடை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கொட்றிச் குழுமத்தின் உலகளாவிய தரநிலைகள் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகும் அதே வேளையில், நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது. www.godrejsrilanka.com பீட் கிரேடி சேம்பர் (Peet Grady Chamber) நன்கொடையாக வழங்கப்பட்ட வேளையில்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right