இன்றைய திகதியில் எம்மில் பலரும் தங்களது வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். ஆனால் புற சூழல் எம்முடைய எதிர்பார்ப்புக்கு மாறாக இருப்பதால் விவரிக்க இயலாத சங்கடங்களுக்கு ஆளாக வேண்டி இருக்கிறது.
சிலருக்கு நன்றாக இயங்கிக் கொண்டிருந்த விற்பனை திடீரென்று வாடிக்கையாளர்களின் வருகை குறைவு காரணமாக நஷ்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும். இவர்கள் நஷ்டத்தை நிறுத்தவும், லாபத்தை உண்டாக்கவும், லாபத்தை அதிகரிக்கவும் எம்முடைய முன்னோர்கள் சில ஆன்மீக பொருட்களை முழு நம்பிக்கையுடன் பாவிக்க வேண்டும் என குறிப்பிடுகிறார்கள்.
உங்களது விற்பனை நிலையங்களில் அல்லது அலுவலகத்தில் அல்லது தொழிற்சாலையில் வெள்ளெருக்கு விநாயகர் என ஆன்மீக பொருட்கள் விற்பனை நிலையத்தில் கிடைக்கும் ஜன வசிய பொருளை வாங்கி வந்து வரவேற்பறையில் இடம்பெறச் செய்யலாம்.
வெள்ளை வண்ணத்திலான யானை சிலைகள் இருந்தாலும் அல்லது வெள்ளியால் உருவாக்கப்பட்ட யானை சிலைகள் இருந்தாலும் அதனையும் வாங்கி வரவேற்பறையில் இடம்பெறச் செய்தால் நேர் நிலையான ஆற்றல் பரவி, வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து வணிகத்தை மேம்படுத்தும்.
வெள்ளெருக்கு விநாயகர் - வெண்மை வண்ண யானை சிலையாக கிடைக்கவில்லை என்றால் அதற்காக வருத்தப்படாதீர்கள். இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அதனை புகைப்படமாக மாற்றம் செய்து , உங்களுடைய விற்பனை நிலையத்தின் வரவேற்பறையில் இடம்பெறச் செய்யுங்கள்.
இதைக் கடந்து உங்கள் மீதான கண்ணேறு காரணமாகவும் அதிர்ஷ்டம் குறைந்து விடும். இத்தகைய அசௌகரியம் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றால் வெள்ளியினாலான யானை முடி மோதிரத்தை உங்களுடைய இடது கையின் நடு விரலில் அணிந்து கொண்டால் கண்ணேறு கழிந்து , அதிர்ஷ்டம் உண்டாகி, அதனைத் தொடர்ந்து லாபம் கிடைக்கத் தொடங்கும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM