பலாமரத்தில் ஏறி பலாவிலை வெட்டியவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் மேல்பிரிவு தோட்டத்திலேயே இன்று காலை இச் சம்பவம் அடம்பெற்றுள்ளது.

ஆட்டுக்கு உணவுக்காக பலாவிலைகளை வெட்டுவதற்காக மரத்தில் ஏறிய போதே மரத்திலிருந்த குளவி கலைந்துவந்து கொட்டியுள்ளது.

குளவிக்கொட்டுக்கு இலக்காகிய இளைஞன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர்.