இன்றைய திகதியில் உலகத்தில் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது உயர் குருதி அழுத்த பாதிப்பு தான் என அண்மைய ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக உலக சுகாதார ஸ்தாபனம் உயர் குருதி அழுத்தம் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
வைத்தியர்களும் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்கு தொடர்ச்சியாகவும் , முறையாகவும் சிகிச்சை பெற்றால் ஆயுள் முழுவதும் வேறு எந்த உடலியல் சிக்கல்களும் குறிப்பாக இதயம், சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள இயலும் என விவரிக்கிறார்கள்.
உயர் குருதி அழுத்த பாதிப்பு ஏற்பட்டவர்கள் எந்த பாலினத்தவர்களாக இருந்தாலும் எந்த வயதினராக இருந்தாலும் அதற்கு சிகிச்சையை பெற வேண்டும்.
முதுமையின் காரணமாக சில சிகிச்சைகளை நோயாளிகள் தவிர்ப்பர். ஆனால் உயர் குருதி அழுத்த பாதிப்பு ஏற்பட்டால் முதுமை வயதிலும் இதற்கு சிகிச்சை பெற வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இதற்கு உரிய தருணத்தில் முறையாகவும், தொடர்ச்சியாகவும் சிகிச்சை பெறாவிட்டால் பக்கவாதம் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் உண்டாகும் என்றும் வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.
உயர் குருதி அழுத்த பாதிப்பிற்கு ஆளானவர்கள் மருந்தியல் சிகிச்சையை மேற்கொண்டாலும் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தான் குருதி அழுத்தம் மற்றும் உயர் குருதி அழுத்த பாதிப்பு சீரடையும்.
மேலும் தெற்காசிய நாட்டினர் நாளாந்தம் அவர்களுடைய உணவு முறையில் 10 முதல் 12 கிராம் அளவிற்கு உப்பை பாவிக்கிறார்கள். இதன் அளவை 50 சதவீத அளவிற்கு குறைத்தால் உயர் குருதி அழுத்த பாதிப்பிலிருந்து எளிதாக நிவாரணம் பெறலாம் என்ற பரிந்துரையையும் அவர்கள் முன்வைக்கிறார்கள்.
வைத்தியர் மனோகர்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM