"கழிவுகளுக்கு அப்பால்: தெற்காசியாவில் சிறந்த ஊட்டச்சத்துக்காக உணவு, நீர் மற்றும் ஆற்றலை மேம்படுத்துதல்" என்ற உயர்மட்ட கொள்கை உரையாடலில் பிரதமர் பங்கேற்றார்.
இன்று வியாழக்கிழமை (18) கொழும்பில் உள்ள ஐரிசி ரத்னதீப ஹோட்டலில் நடைபெற்ற "கழிவுகளுக்கு அப்பால்: தெற்காசியாவில் சிறந்த ஊட்டச்சத்துக்காக உணவு, நீர் மற்றும் ஆற்றலை மேம்படுத்துதல்" என்ற தலைப்பிலான உயர்மட்ட கொள்கை உரையாடலில் பங்கேற்றார்.
இந்த கொள்கை உரையாடல் உலக வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தால் பிரதமர் அலுவலகம் மற்றும் விவசாய, காணி மற்றும் வாழ்வாதார அமைச்சு மூலம் கேட்ஸ் மன்றம் மற்றும் பிற அபிவிருத்தி பங்காளிகளின் ஆதரவுடன் இணைந்து நடத்தப்பட்டது.
இந்த இரண்டு நாள் கொள்கை உரையாடல் உணவு அமைப்பை வலுப்படுத்துவதற்கும் சுழல் பொருளாதார தீர்வுகளை ஊக்குவிப்பதற்கும், காலநிலை-சான்ற விவசாயத்தை ஏற்றுக்கொள்வதற்கும், உணவு இழப்பு மற்றும் கழிவுகளை குறைப்பதற்கும் நடைமுறை வழிகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முக்கிய உரையை வழங்கிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,உணவு இழப்பு மற்றும் உணவு பாதுகாப்பின்மையை நிவர்த்தி செய்வதன் சரியான நேரத்தின் தேவையை வலியுறுத்தினார். பிரதமர் மேலும் தொழில்நுட்ப தீர்வுகள், விவாசாய வர்த்தக செயலமர்வுகள் மற்றும் உணவு அமைப்பில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பின் ஆதரவுடன் தேசிய மட்டத்தில் உணவு பாதுகாப்பை நிவர்த்தி செய்வதில் தேவையான ஒருங்கிணைப்பு, புத்தாக்கம் மற்றும் உள்ளடக்கல் என்ற மூன்று முக்கிய காரணிகளை எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்வில் சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி,
நேபாளம், மாலைதீவு மற்றும் இலங்கைக்கான உலக வங்கிப் பிரிவு பணிப்பாளர் டேவிட் சிஸ்லென், கேட்ஸ் மன்ற பணிப்பாளர் அர்ச்சனா வியாஸ் மற்றும் பிம்ஸ்டெக்கின் பொதுச் செயலாளர், தூதர் இந்திர மணி பாண்டே ஆகியோருடன் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இந்த உரையாடல் பிராந்தியம் முழுவதும் உணவு விரயத்தைக் குறைத்தல், ஊட்டச்சத்தை அதிகரித்தல் மற்றும் பேண்தகு வளப் பயன்பாட்டை மேம்படுத்தல் ஆகியவற்றின் செயற்பாட்டைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM