bestweb

திரைப்படமாகும் சாம்பாராக் இசையின் பிதாமகன் டார்க்கி நாகராஜாவின் சுயசரிதை

Published By: Digital Desk 2

19 Jun, 2025 | 04:57 PM
image

உலகம் முழுவதும் சாம்பாராக் எனும் புதிய இசை வடிவத்தை உருவாக்கி பிரபலப்படுத்திய மலேசிய இசை கலைஞரான டார்க்கி நாகராஜாவின் வாழ்க்கை வரலாறு 'நான் டார்க்கி ' எனும் பெயரில் திரைப்படமாக தயாராகிறது. 

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிரத்யேக காணொளியாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டிருக்கிறார்.

இயக்குநர்  விக்ரம் லட்சுமணம் இயக்கத்தில் உருவாகும் 'நான் டார்க்கி' எனும் பயோ பிக் திரைப்படத்தில் டார்க்கி நாகராஜா நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு யுகன் சண்முகம் ஒளிப்பதிவு செய்ய, அஸ்வத் மற்றும் ரோஷன் ஜாம் ராக் ஆகியோர் இசை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிரபலமான  இசைக் கலைஞரின் தொழில்முறை வாழ்க்கையை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை பொக்கெட்ப்ளே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் வீர சேகர் தியாகராஜன் மற்றும் திருவரசு சாண்டிரசேகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இசைக் கலைஞர் டார்க்கி நாகராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சுயசரிதை திரைப்படமாக உருவாகும் ' நான் டார்க்கி' எனும் திரைப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இதில் இசைத் துறையில் பிரவேசித்து பிரபலமான கலைஞராக அவர் உயர்வதற்காக எதிர்கொண்ட சவால்களையும் , போராட்டங்களையும் விவரிப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்