நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் கடமை புரியும் 10 வைத்தியர்கள், தாதிமார்கள் மற்றும் ஊழியர்கள் 20 பேருக்கு டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் தற்போது குறித்த வைத்தியசாலையின் டெங்கு விசேட சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் 982 பேர் தங்கியிருந்து சிகிச்சைபெற்றுவரும் நிலையில், அவர்களில் 591 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளதாக, வைத்திய சாலையின் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இவ் வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்கள், தாதிமார்கள் உள்ளிட்ட ஊழியர்கள் 30 பேருக்கு டெங்குக் காய்ச்சல் நோய் தொற்றியுள்ளதற்கான ஆதாரபூர்வ அறிக்கையொன்றினையும் தகவல் மையம் வெளியிட்டுள்ளது.
இங்கு கடமை புரியும் வைத்தியர்கள் 10 பேரும், தாதிமார்கள் மற்றும் ஊழியர்கள் 20 பேருக்கும் டெங்குக் காய்ச்சல் கடுமையாக ஏற்பட்டுள்ளதுடன், இவர்கள் தற்போது இவ் வைத்தியசாலையின் டெங்கு விசேட சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் வளவில் மெற்கொள்ளப்பட்ட டெங்கு தொடர்பிலான சோதனை நடவடிக்கைகளின்போது, பெரும்பாலான இடங்களில் டெங்கு நுளம்புக் குடம்பிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM