புத்தளம் - குருணாகல் வீதியில் விபத்து ; முதியவர் பலி!

20 Jun, 2025 | 03:27 PM
image

புத்தளம் - குருணாகல் வீதியில் குருணாகல் நகரத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (19) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

புத்தளத்திலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியில் பயணித்த முதியவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்த முதியவரின் சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

இது தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டெங்கு நுளம்பு பெருகும் வகையில் வளாகங்களை...

2026-07-11 15:52:56
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சேதங்கள் குறித்து...

2026-07-11 15:33:05
news-image

பொருளாதார நெருக்கடியை திசைதிருப்பவே கைதுகளும் குற்றத்தடுப்பு...

2026-07-11 15:32:14
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 166 பெண்...

2026-07-11 14:57:59
news-image

திறைசேரி நிதி மோசடி: 2.5 மில்லியன்...

2026-07-11 14:52:00
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: ஐநா மனித...

2026-07-11 14:40:33
news-image

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி 31 வயதுடைய...

2026-07-11 14:01:57
news-image

பதுளையில் தனியார் ஆய்வகங்களில் காலாவதியான மருத்துவ...

2026-07-11 13:19:57
news-image

நாட்டில் பலத்த காற்று வீசக்கூடும் :...

2026-07-11 13:10:48
news-image

நீதி அமைச்சர் குறித்து ரஞ்சன் ராமநாயக்கவின்...

2026-07-11 12:33:36
news-image

நாட்டில் டெங்கு மரணங்கள் 47 ஆக...

2026-07-11 12:36:14
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இடம்பெற்ற...

2026-07-11 12:18:21