Sunshine Consumer Lanka நிறுவனத்தின் கீழ் சந்தையில் முன்னிலை வகித்து வருகின்ற உயர் ரக தேயிலையான Zesta Tea, ஜுன் 11 அன்று One Galle Face ல் அமைந்துள்ள PVR Cinemas சினிமா திரையரங்கத்தில் ஏற்பாடு செய்த விசேட காட்சி நிகழ்வில், மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தனது விளம்பரத்தை வெளியிட்டு வைத்து, மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.
மறக்கமுடியாத வகையில் கதைப் படைப்பாக்கத்திற்கு புகழ்பெற்ற ஒரு நாமம் மீண்டும் அறிமுகமாவதைக் கொண்டாடும் வகையில், டிஜிட்டல் உள்ளடக்க படைப்பாளர்கள், கூட்டாளர்கள் மற்றும் நீண்டகாலமாக இந்நாமத்துடன் தொடர்புபட்ட தரப்பினரை உள்ளடக்கிய அதற்கு நெருக்கமான விருந்தினர்கள் இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இரண்டரை தசாப்தங்களுக்கு முன்னர், தொடர்ந்தும் அன்பான நினைவுகளைத் தூண்டி, இப்போதும் தனித்துவமானதாகக் காணப்படும் விளம்பரத்துடன், இலங்கை விளம்பர கதைப் படைப்பாக்கத்தில் Zesta தனது பெயரைப் பொறித்துள்ளது.
வெண்ணிற சேர்ட் அணிந்த பெண்ணும், ‘Zesta’ என அந்த பெண் உச்சரிக்கும் பாணியும், தேநீரைத் தயாரிக்கும் கணவரும் என தனித்துவமான ‘டிங்-டிங்’ ஒலியுடன் வெளிவந்த விளம்பரத்தை மக்கள் இன்னமும் மறந்து விடவில்லை.
அத்தருணம் ஒரு விளம்பரம் மாத்திரமல்ல, ஏராளமான மக்கள் தினந்தோறும் காலையில் தயாரிக்கும் தேநீரியின் ஆளுமைக்கு மீள்வரைவிலக்கணம் வகுக்க வழிவகுத்த கலாச்சார அடையாளமாக அது மாறியது.
ஆரம்பத்தில் வெளிவந்த அசல் விளம்பரத்தை மீண்டும் நினைவுபடுத்தும் வண்ணம், ‘My Zesta Story’ பிரச்சாரத்தின் மூலமாக அந்த விளையாட்டுத்தனமான காதல் உணர்வை Zesta மீண்டும் தூண்டியுள்ளதுடன், தமது சொந்த கதைப் படைப்பாக்க வடிவில் இந்த வர்த்தகநாமத்தின் தனித்துவமான மரபிற்கு மீள்விளக்கம் அளிப்பதற்கு தேநீர் பிரியர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
மிகவும் ஆர்வத்துடன் கதைப் படைப்பாக்கங்களை முன்வைத்தவர்களிடமிருந்து இதற்குக் கிடைக்கப்பெற்றிருந்த பலத்த வரவேற்பு, இதயபூர்வமானதாகவும், கற்பனைக்குத் தீனி போடுவதாகவும் அமைந்துள்ளதுடன், அர்த்தமுள்ள கதைப் படைப்புடன் Zesta ன் மீள்வருகைக்கு களம் அமைத்துள்ளது.
Zesta கண்டுள்ள பரிணாம வளர்ச்சி குறித்து Sunshine Consumer Lanka நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி கவி ராஜபக்ச அவர்கள் கருத்து வெளியிடுகையில்,
“Zesta என்பது எப்போதுமே ஒரு கப் தேநீர் என்பதற்கும் அப்பாற்பட்டது. வாழ்வின் சின்னஞ்சிறிய, ஆனால் அர்த்தமுள்ள தருணங்களை அழகாக வசப்படுத்தி, வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளை எமது விளம்பரங்கள் தோற்றுவித்துள்ளன. இப்புதிய விளம்பரம் அதன் மீள்வருகையாக மாறியுள்ளது மாத்திரமன்றி, நாம் யார் என்பதையும், இலங்கை மக்கள் மத்தியில் தலைமுறை தலைமுறையாக எமது தேநீர் அவர்களுக்கு எதனைக் குறித்து நிற்கின்றது என்பதை நினைவூட்டுவதாகவும் அமைந்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.
கதைப் படைப்பாக்க மூலங்களுக்கு மீண்டும் துணிச்சலாகத் திரும்பும் வகையில் தனது புத்தம்புதிய வர்த்தகநாம விளம்பர திரைப்படத்தை Zesta வெளியிட்டுள்ளது. இன்றைய நுகர்வோருடன் அர்த்தமுள்ள வழியில் தொடர்புபடுத்தி, வர்த்தகநாமத்தின் பாரம்பரியத்தைக் கௌரவிக்கும் வகையில், மிகவும் பிரபலமான தனது முந்தைய விளம்பரத்தை, சினிமா வெளிப்பாடாக, புத்தம்புதிய உணர்வுபூர்வமாக எதிரொலிக்கும் கதைப் படைப்பாக மாற்றி, மிகவும் பரிச்சயமான தேநீர் இடைவேளையை மிகவும் கவனமாக வெளிக்கொண்டு வந்துள்ளது.
Sunshine Consumer Lanka நிறுவனத்தில் Zesta க்கான சிரேஷ்ட வர்த்தகநாம முகாமையாளர் சமாதி தென்னக்கோன் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
“உணர்வுபூர்வமான கதைப் படைப்பாக்கத்திற்கு எப்போதும் மதிப்பளித்து வருகின்ற ஒரு வர்த்தகநாமம் என்ற ரீதியில், இந்த முதற்காட்சியானது எமக்கு மிகவும் அர்த்தமுள்ளதொரு தருணமாக மாறியுள்ளது. இது வெறுமனே ஒரு விளம்பரத்தின் வெளியீடு கிடையாது. நாம் எவ்வளவு தூரம் பயணித்துள்ளோம் என்பதைப் பிரதிபலிக்கும் Zesta ன் கொண்டாட்டமாக மாறியுள்ளதுடன், நாம் அடுத்து எங்கு செல்லவுள்ளோம் என்பதில் அங்கம் வகிப்பதற்கு நுகர்வோருக்கு அழைப்பு விடுத்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.
அனைவருக்கும் முன்மாதிரியாக அமைந்த விளம்பரங்கள் என்ற பரிமாணத்திலிருந்து, பயனர்கள் உருவாக்கும் உள்ளடக்கங்ளை வெளிக்கொண்டு வருவதை Zesta முன்னின்று வழிநடாத்தியுள்ளதுடன், இலங்கையின் தேயிலைத் துறையில் மிகவும் அங்கீகரிக்கப்படுகின்ற நாமங்களில் ஒன்றாகவும் வளர்ச்சி கண்டுள்ளது. இப்பிரச்சாரம் வர்த்தகநாமத்தின் தோற்றத்திற்கு கௌரவம் அளிப்பது மாத்திரமன்றி, மக்களை இதயங்களில் நிலைநிறுத்தும் வகையில் அது எத்தகைய வளர்ச்சியை அடைந்துள்ளது என்பதற்கு தெளிவான அடையாளமாகக் காணப்படுகின்றது.
25 ஆண்டுகளுக்கு முன்னர் எளிமையாகத் தோற்றம் பெற்ற Sunshine Holdings PLC நிறுவனத்தின் நுகர்வோர் வர்த்தகப் பிரிவு, தற்போது நாட்டில் விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் தயாரிப்புக்கள் துறையில் உச்ச நிறுவனங்களில் ஒன்றாக வளர்ச்சி கண்டுள்ளது. நாட்டில் மிகப் பாரிய தேயிலை வர்த்தகநாம நிறுவனத்தையும், வன் மிட்டாய் வகையில் துணைப் பிரிவில் தலைமைத்துவ ஸ்தானத்தையும் தனதாக்கியுள்ளதுடன், ரூபா 19 பில்லியன் வருடாந்த விற்பனைப் புரள்வையும் கொண்டுள்ளது.
Zesta, Watawala மற்றும் Ran Kahata ஆகிய மூன்று தேயிலை வர்த்தகநாமங்களும் முறையே தத்தமது பிரிவுகளில் மிகச் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அண்மையில் கொள்முதல் செய்த Daintee Ltd நிறுவனத்தின் மூலமாக Daintee (toffees மற்றும் chocos), Milady (candies) மற்றும் Xtra (lozenges மற்றும் gums) உள்ளிட்ட 75+ தயாரிப்புக்களுடன், நாட்டிலுள்ள மிகவும் பிரபலமான மிட்டாய் வர்த்தகநாமங்கள் பலவற்றையும் கொண்டுள்ளது.
ஒட்டுமொத்த மளிகைப்பொருள் வழங்கல் மார்க்கங்களில் 90% க்கும் மேலாக அது நிலைபெற்றுள்ளது. 2022ம் ஆண்டில் குழுமத்தால் முழுமையாகக் கொள்முதல் செய்யப்பட்ட Sunshine Tea (Pvt) Ltd நிறுவனம், Sunshine Holdings ன் ஏற்றுமதிப் பிரிவாக இயங்கி வருவதுடன், உயர் ரக இலங்கைத் தேயிலையின் உச்ச ஏற்றுமதியாளர்கள் மத்தியில் தொடர்ச்சியாக தரப்படுத்தப்பட்டு வந்துள்ளது.
குழுமத்தின் பிரதான வர்த்தகநாமமான Zesta, மற்றும் அதன் மூன்று சொந்த, முன்னணி வர்த்தகநாமங்களான AvanTea, Gordon Frazer மற்றும் Teazup உள்ளிட்ட நாட்டில் உற்பத்தியாகும் மிகச் சிறந்த தேயிலையின் 200 க்கும் மேற்பட்ட வகைகளை 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரந்துள்ள தனது பிரத்தியேக வாடிக்கையாளர்களுக்கு ஏற்றுமதி செய்து, நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM