திரையுலகிற்கு அளித்த மகத்தான பங்களிப்பிற்காக ஹொலிவுட் நட்சத்திரம் டொம் க்ரூஸுக்கு கௌரவ ஒஸ்கார் விருது வழங்கப்படவுள்ளது. நவம்பர் மாதம் 16, ஆம் திகதி விருது வழங்கும் நிகழ்வு நடைபெறும் 16வது கவர்னர்ஸ் விருது விழாவில் அவர் இந்த சிறப்பு விருதைப் பெறுவார்.
டொம் க்ரூஸ் ஹொலிவுட் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் ஸ்டண்ட் காட்சிகளை மிகவும் சாதாரணமாக செய்து முடிப்பவர். இவரது நடிப்பில் வெளியான மிஷன் இம்பாசிபிள் வரிசை படங்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
டொம் க்ரூஸின் அதிரடியான நடிப்பு காட்சிகளுக்காகவே பிரபலமான அவரது 'மிஷன்: இம்பாஸிபிள்' திரைப்பட வரிசையில் 8-வது பாகமான, 'மிஷன்: இம்பாஸிபிள்- தி ஃபைனல் ரெக்கனி' வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியான இந்தப் படம் இந்தியாவிலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி வசூல் குவித்து வருகிறது. இதனை தொடர்ந்து 'மிஷன்: இம்பாஸிபிள்- தி ஃபைனல் ரெக்கனி' பட சண்டை காட்சிக்காக நடிகர் டாம் க்ரூஸ் கின்னஸ் சாதனையாளராகி உள்ளார். இப்படத்தில் எரியும் பாராசூட்டில் இருந்து அதிக முறை (16) குதித்த நபர் என்ற சாதனையை தன்வசப்படுத்தி இருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM