அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான தாக்குதல் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார் ஆனால் ஈரான் தனது அணுவாயுதிட்டத்தை கைவிடுமா என பார்ப்பதற்காக அதனை நடைமுறைப்படுத்துவதை தாமதிக்கின்றார் என அவரின் உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர் என வோல்ஸ்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து வோல்ஸ்ரீட் ஜேர்னல் மேலும் தெரிவித்துள்ளதாவது
ஈரான் மீதான தாக்குதல் திட்டங்களிற்கு அனுமதியளிப்பதாக செவ்வாய்கிழமை இரவு டிரம்ப் தனது சிரேஸ்ட உதவியாளர்களிடம் தெரிவித்தார்,ஆனால் தெஹ்ரான் தனது அணுசக்தி திட்டங்களை கைவிடுமா என பார்ப்பதற்காக பொறுத்திருக்கின்றார் என விடயங்களை நன்கறிந்தவர்கள் தெரிவித்தனர்.
ஈரானின் நன்கு பாதுகாக்கப்பட்ட போர்டே அணுஉலை அமெரிக்காவின் இலக்காகயிருக்கலாம்,அது ஒரு மலைக்கு உள்ளே உருவாக்கப்பட்டுள்ளது,மிக வலுவான குண்டுகளால் மாத்திரமே அதனை அழிக்க முடியும் என இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஈரானின் அணுசக்திநிலையங்கள் மீது தாக்குதலை மேற்கொள்வீர்களா என்ற கேள்விக்கு நான் அதனை செய்யலாம் செய்யாமல் விடலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் நிபந்தனையற்ற விதத்தில் சரணடையவேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ள அவர் அடுத்தவாரம் மிகப்பெரியதாகயிருக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM