குளவி கொட்டுக்கு இலக்காகி கணவர் பலி ; மனைவி வைத்தியசாலையில் அனுமதி!

19 Jun, 2025 | 12:39 PM
image

அம்பாந்தோட்டை , அங்குனுகொலபெலெஸ்ஸ பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி கணவர் உயிரிழந்துள்ளதுடன் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்குனுகொலபெலெஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.

69 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் தனது மனைவியுடன் இணைந்து தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்கச் சென்றுள்ளார் .

இதன்போது தென்னந்தோப்பில் இருந்த குளவி கூடு ஒன்று கலைந்ததால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குளவி கொட்டுக்கு இலக்காகிய கணவரும் மனைவியும் பிரதேசவாசிகளின் உதவியுடன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது கணவர் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குளவி கொட்டுக்கு இலக்காகிய மனைவி எம்பிலிப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் நீர்கொழும்பில்...

2026-08-12 17:32:12
news-image

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு...

2026-08-12 17:28:31
news-image

2025இல் முல்லைத்தீவில் 8,220.49 மெற்றிக்தொன் மீன்கள்...

2026-08-12 17:12:16
news-image

ஜப்பான் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத்...

2026-08-12 16:57:08
news-image

வெளிப்படைத்தன்மை கொண்ட நீண்டகால முதலீடுகளுக்கு இலங்கையின்...

2026-08-12 16:42:09
news-image

இலங்கையில் இன்னும் ஆயுர்வேத சுற்றுலா அபிவிருத்தி...

2026-08-12 16:40:30
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 3 வாகனங்கள்...

2026-08-12 16:38:31
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திங்கட்கிழமை கொடியேற்றம்...

2026-08-12 16:14:25
news-image

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் தீர்மானத்தை...

2026-08-12 15:52:14
news-image

பரீட்சைகள் திணைக்களத்துக்கும் ஹேக்கர் அச்சுறுத்தல்

2026-08-12 15:14:48
news-image

எல் நினோ தீவிரமடைய 81 சதவீதம்...

2026-08-12 14:57:07
news-image

கடற்படைத் தளபதியை சந்தித்தார் பாகிஸ்தான் தூதரக...

2026-08-12 14:56:29