நுரைச்சேலை பிரதேசத்தில் சட்டவிருாத வலி நிவாரண மாத்திரைகளுடன் நபரொருவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

வட மேல் மாகாண கடற்படையினரும்  புத்தளம் விஷேட அதிரடைப்படையினரும் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் போதே குறித்த நபர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து 100 சட்டவிரோத வலி நிவாரண மாத்திரைகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மாத்திரைகள் மயக்கத்தை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்துபவை எனவும் அவை சட்டவிரோதமானவை எனவும் குறித்த மாத்திரைகளை நுரைச்சோலைப் பகுதியில் விநியோகிக்கும் நோக்குடன் எடுத்துச் செல்லும் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மாத்திரைகளுடன் நுரைச்சோலை பெலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.